• Nov 24 2024

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; நாளை முதல் வானிலையில் மாற்றம்!

Chithra / Nov 12th 2024, 7:25 am
image

  

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் சில தினங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்.

ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

அத்துடன் கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

அதேநேரம் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும். 

இதேவேளை இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; நாளை முதல் வானிலையில் மாற்றம்   தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் சில தினங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்.ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன் கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.அதேநேரம் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும். இதேவேளை இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement