• Nov 23 2024

எங்களை அழித்து விட்டு இலங்கையில் தொழில் செய்யுங்கள் - தமிழக ஆட்சியாளர்களிடம் இலங்கை மீனவர்கள் ஆதங்கம்...!

Anaath / Jun 26th 2024, 11:21 am
image

தமிழக ஆட்சியாளர்கள் எம்மை தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்கின்றனர். ஆனால் அவர்கள் இலங்கை மீனவர்களை வாழ விடாது அத்து மீறி சகல வளங்களையும் சுரண்டி செல்வதாக முல்லைத்தீவு மீனவர் சம்மேளன உப தலைவர்  வி.அருள்நாதன் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருது தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 24 ஆம் திகதி இந்தியன் இழுவைப்படகுகள் எமது கடல் பகுதிக்குள் நுழைந்தது. அதனை தடுப்பதற்காக எமது கடல் படையினர் சென்ற போது  அங்கு முரண்பட்டு அங்கு ஒரு கடற்படை வீரர் மரணமாயுள்ளார். அவருக்கு மீனவ மக்கள் சார்பிலும் முல்லைத்தீவு மக்கள் சார்பிலும் அனுதாபம் ஒன்றை நாங்கள் தெரிவிக்கிறோம். ஏனெனில்  உண்மையாகவே எங்களினுடைய வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காக இந்தியன் இழுவைப்படகை தடுக்க அந்த கடல் பிரதேசத்துக்கு சென்றிருக்கிறார். ஆகவே இப்படியான ஒரு அசம்பாவிதம் நடக்கும் போந்து எங்களின் வாழ்வாதாரம் அளிக்கப்படுகிறது. ஆகவே இழுவைப்படகுகள் அத்து மீறி பலமுறை நாங்கள் கதைத்தும் எமது வளத்தை அளிப்பதற்கு அங்கிருந்து வருகிறார்கள். இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

அதை விட இன்று எங்களின் வருங்கால சந்ததிகள் வாழ்வதற்காக அந்த பிரதேசத்தில் எமது வாழ்வாதாரத்திற்காக  மேற்கொள்ள சென்ற போது எதிர்பாராத விதமாக அவர் மரணமடைதுள்ளார். ஆகவே இதனை கவனத்தில் எடுத்து  இந்திய தமிழ் நாட்டு அமைச்சர்களுக்கு நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால் தொப்புள் கோடி என்று சொல்கிறீர்கள். அதைவிட தொப்புள் கொடி என்று சொல்லாமல் நீங்கள் இந்த பிரதேசத்தில் வந்து  வாழ்வது மேலாக இருக்கும்.  என அவர் தெரிவித்துள்ளார்.

எங்களை அழித்து விட்டு இலங்கையில் தொழில் செய்யுங்கள் - தமிழக ஆட்சியாளர்களிடம் இலங்கை மீனவர்கள் ஆதங்கம். தமிழக ஆட்சியாளர்கள் எம்மை தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்கின்றனர். ஆனால் அவர்கள் இலங்கை மீனவர்களை வாழ விடாது அத்து மீறி சகல வளங்களையும் சுரண்டி செல்வதாக முல்லைத்தீவு மீனவர் சம்மேளன உப தலைவர்  வி.அருள்நாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருது தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 ஆம் திகதி இந்தியன் இழுவைப்படகுகள் எமது கடல் பகுதிக்குள் நுழைந்தது. அதனை தடுப்பதற்காக எமது கடல் படையினர் சென்ற போது  அங்கு முரண்பட்டு அங்கு ஒரு கடற்படை வீரர் மரணமாயுள்ளார். அவருக்கு மீனவ மக்கள் சார்பிலும் முல்லைத்தீவு மக்கள் சார்பிலும் அனுதாபம் ஒன்றை நாங்கள் தெரிவிக்கிறோம். ஏனெனில்  உண்மையாகவே எங்களினுடைய வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காக இந்தியன் இழுவைப்படகை தடுக்க அந்த கடல் பிரதேசத்துக்கு சென்றிருக்கிறார். ஆகவே இப்படியான ஒரு அசம்பாவிதம் நடக்கும் போந்து எங்களின் வாழ்வாதாரம் அளிக்கப்படுகிறது. ஆகவே இழுவைப்படகுகள் அத்து மீறி பலமுறை நாங்கள் கதைத்தும் எமது வளத்தை அளிப்பதற்கு அங்கிருந்து வருகிறார்கள். இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.அதை விட இன்று எங்களின் வருங்கால சந்ததிகள் வாழ்வதற்காக அந்த பிரதேசத்தில் எமது வாழ்வாதாரத்திற்காக  மேற்கொள்ள சென்ற போது எதிர்பாராத விதமாக அவர் மரணமடைதுள்ளார். ஆகவே இதனை கவனத்தில் எடுத்து  இந்திய தமிழ் நாட்டு அமைச்சர்களுக்கு நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால் தொப்புள் கோடி என்று சொல்கிறீர்கள். அதைவிட தொப்புள் கொடி என்று சொல்லாமல் நீங்கள் இந்த பிரதேசத்தில் வந்து  வாழ்வது மேலாக இருக்கும்.  என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement