• Oct 18 2024

பூஜைக்கு ஏற்ற சிறந்த விளக்குகள் தொடர்பான விபரம்!

Tamil nila / Dec 22nd 2022, 8:57 pm
image

Advertisement

அகல்,எண்ணெய், திரி. சுடர் ஆகிய நான்கும் சேர்வதே விளக்காகும். இவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் குறிக்கும். இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு சாதனங்களும் ஆகும். இதனைக் கொண்டே நாம் ஆன்ம ஒளியைப் பெற வேண்டும் என்பதே விளக்கின் தத்துவம் ஆகும்.


விளக்கின் அடிப்பாகம், நமது உடலின் தொப்புளுக்கு கீழ் உள்ள மூலாதாரம், விளக்கின் தண்டு முதுகுத்தண்டு வழியே மேல் நோக்கி செல்லும் சூட்சுமநாடி, கழுத்துக்கு மேற்பட்ட பகுதியே குத்துவிளக்கின் தீபம்.


எந்த விளக்கும் தானே எரியாது. சுடரைத் தூண்டக் கூடிய மற்றொரு சுடர் நிச்சயம் தேவைn போல எந்த ஆன்மாவும் தானே முக்தியடைய முடியாது. அதற்குத் துணை செய்ய இறையருள் ஒளி தேவை. இறையருள் ஒளி ஆன்மாவுக்கு கிடைக்கும் போது கிளர்ந்தெழுகின்ற ஆன்மா, தானும் சுடராய்ப் பிரகாசிக்கின்றது. இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு விளக்கும் (உடலும்), நெய்யும் (உணர்வுகளும்), திரிகளும் (ஆன்மாவும்) கச்சிதமாகப் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.



குத்துவிளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும்,  பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களை நினைவூட்டுகின்றன.  அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை ஆகியவனாகும். 


வெள்ளிக்கிழமை, கார்த்திகை, திருவாதிரை, பூசம், விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திர நாட்கள், பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்திஇ பஞ்சமிஇ ஏகாதசி ஆகிய திதிகளிலும் மற்றும் நவராத்திரிஇ சிவராத்திரிஇ ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, தை செவ்வாய், தை வெள்ளி ஆகிய நாட்கள் திருவிளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள் ஆகும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனையாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையை தரும்.


பூஜை செய்யும் விளக்குகளில் வெள்ளி விளக்கு, ஐம்பொன் விளக்கு, வெண்கல விளக்கு,பித்தளை விளக்கு  சிறப்புடையது. அவரவர் விருப்பப்படியும், வசதிப்படியும் தீபங்களை அமைத்துக் கொள்ளலாம். 


மண் அகல் விளக்குகளை  அலங்கார பூஜைக்கும், கார்த்திகை தீபத்திற்கும் மற்றவற்றிற்கும் சிறப்புடையன. மாக்கல் விளக்கை தெய்வ மாடத்தில் ஏற்றலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை, பூஜைக்கோ, வீடு களில் ஏற்றுவ தற்கோ பயன்படுத்தக் கூடாது.

பூஜைக்கு ஏற்ற சிறந்த விளக்குகள் தொடர்பான விபரம் அகல்,எண்ணெய், திரி. சுடர் ஆகிய நான்கும் சேர்வதே விளக்காகும். இவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் குறிக்கும். இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு சாதனங்களும் ஆகும். இதனைக் கொண்டே நாம் ஆன்ம ஒளியைப் பெற வேண்டும் என்பதே விளக்கின் தத்துவம் ஆகும்.விளக்கின் அடிப்பாகம், நமது உடலின் தொப்புளுக்கு கீழ் உள்ள மூலாதாரம், விளக்கின் தண்டு முதுகுத்தண்டு வழியே மேல் நோக்கி செல்லும் சூட்சுமநாடி, கழுத்துக்கு மேற்பட்ட பகுதியே குத்துவிளக்கின் தீபம்.எந்த விளக்கும் தானே எரியாது. சுடரைத் தூண்டக் கூடிய மற்றொரு சுடர் நிச்சயம் தேவைn போல எந்த ஆன்மாவும் தானே முக்தியடைய முடியாது. அதற்குத் துணை செய்ய இறையருள் ஒளி தேவை. இறையருள் ஒளி ஆன்மாவுக்கு கிடைக்கும் போது கிளர்ந்தெழுகின்ற ஆன்மா, தானும் சுடராய்ப் பிரகாசிக்கின்றது. இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு விளக்கும் (உடலும்), நெய்யும் (உணர்வுகளும்), திரிகளும் (ஆன்மாவும்) கச்சிதமாகப் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.குத்துவிளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும்,  பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களை நினைவூட்டுகின்றன.  அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை ஆகியவனாகும். வெள்ளிக்கிழமை, கார்த்திகை, திருவாதிரை, பூசம், விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திர நாட்கள், பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்திஇ பஞ்சமிஇ ஏகாதசி ஆகிய திதிகளிலும் மற்றும் நவராத்திரிஇ சிவராத்திரிஇ ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, தை செவ்வாய், தை வெள்ளி ஆகிய நாட்கள் திருவிளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள் ஆகும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனையாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையை தரும்.பூஜை செய்யும் விளக்குகளில் வெள்ளி விளக்கு, ஐம்பொன் விளக்கு, வெண்கல விளக்கு,பித்தளை விளக்கு  சிறப்புடையது. அவரவர் விருப்பப்படியும், வசதிப்படியும் தீபங்களை அமைத்துக் கொள்ளலாம். மண் அகல் விளக்குகளை  அலங்கார பூஜைக்கும், கார்த்திகை தீபத்திற்கும் மற்றவற்றிற்கும் சிறப்புடையன. மாக்கல் விளக்கை தெய்வ மாடத்தில் ஏற்றலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை, பூஜைக்கோ, வீடு களில் ஏற்றுவ தற்கோ பயன்படுத்தக் கூடாது.

Advertisement

Advertisement

Advertisement