• Feb 27 2026

35 மில்லியன் ரூபா செலவில் கந்தளாய் குளக்கட்டு பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள்!

shanuja / Feb 26th 2026, 12:52 pm
image

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கந்தளாய் குளக்கட்டு மற்றும் அதன் சூழவுள்ள பகுதிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று மாலை (25) உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.


கந்தளாய் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட அபிவிருத்தித் திட்டத்தின் மூலம், கந்தளாய் குளக்கட்டுப் பகுதி அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு நவீன சுற்றுலா மையமாக மாற்றப்பட்டு வருகின்றது .


கந்தளாய் குளக்கட்டுப் பகுதியில் ஏற்கனவே வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 10  நடமாடும் கடைகள் வழங்கி வைக்கப்பட்டன.


மாலை நேரங்களில் குளக்கட்டு பகுதிக்கு வருகை தரும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நவீன உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஊஞ்சல்கள் மற்றும் ஓய்வு எடுப்பதற்கான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


பயணிகளின் வசதிக்காக முறையான கழிப்பறை தொகுதிகள் மற்றும் சலவை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், பல புதிய உணவு மற்றும் பான விற்பனை நிலையங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.


இந்த அபிவிருத்திப் பணிகள் குறித்து கருத்துத் தெரிவித்த கந்தளாய் பிரதேச சபை தவிசாளர் சந்துருன் தாரக்க,


"அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுமார் 35 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் உயரும்" எனத் தெரிவித்தார்.


திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான கந்தளாய் குளம், தற்போது புதிய பொலிவுடன் காட்சியளிப்பதுடன், இது அப்பகுதியின் சுற்றுலாத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேவேளை, நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வரும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், இப்பகுதி மக்கள் மற்றும் வர்த்தகர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

35 மில்லியன் ரூபா செலவில் கந்தளாய் குளக்கட்டு பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கந்தளாய் குளக்கட்டு மற்றும் அதன் சூழவுள்ள பகுதிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று மாலை (25) உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.கந்தளாய் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட அபிவிருத்தித் திட்டத்தின் மூலம், கந்தளாய் குளக்கட்டுப் பகுதி அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு நவீன சுற்றுலா மையமாக மாற்றப்பட்டு வருகின்றது .கந்தளாய் குளக்கட்டுப் பகுதியில் ஏற்கனவே வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 10  நடமாடும் கடைகள் வழங்கி வைக்கப்பட்டன.மாலை நேரங்களில் குளக்கட்டு பகுதிக்கு வருகை தரும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நவீன உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஊஞ்சல்கள் மற்றும் ஓய்வு எடுப்பதற்கான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.பயணிகளின் வசதிக்காக முறையான கழிப்பறை தொகுதிகள் மற்றும் சலவை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், பல புதிய உணவு மற்றும் பான விற்பனை நிலையங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.இந்த அபிவிருத்திப் பணிகள் குறித்து கருத்துத் தெரிவித்த கந்தளாய் பிரதேச சபை தவிசாளர் சந்துருன் தாரக்க,"அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுமார் 35 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் உயரும்" எனத் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான கந்தளாய் குளம், தற்போது புதிய பொலிவுடன் காட்சியளிப்பதுடன், இது அப்பகுதியின் சுற்றுலாத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை, நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வரும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், இப்பகுதி மக்கள் மற்றும் வர்த்தகர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement