• Nov 24 2024

தனுஷ்கோடியில் அதிகரித்த காற்றின் வேகம், கடல் சீற்றம் - சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை

Chithra / May 23rd 2024, 10:54 am
image


தமிழகம் - தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து, கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் - ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதனால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து வந்திருந்த ஏராளமான  சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்தோடு மேல் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தனுஷ்கோடிக்கு சென்று ஆய்வு செய்த பின், காற்றின் வேகம் குறைவாக வீசினால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிப்பார்கள் என தெரியவருகின்றது.


தனுஷ்கோடியில் அதிகரித்த காற்றின் வேகம், கடல் சீற்றம் - சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தமிழகம் - தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து, கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் - ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதனால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து வந்திருந்த ஏராளமான  சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு மேல் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தனுஷ்கோடிக்கு சென்று ஆய்வு செய்த பின், காற்றின் வேகம் குறைவாக வீசினால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிப்பார்கள் என தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement