• Nov 14 2024

யாழை சேர்ந்த நால்வருக்கு தர்மபிரபாஸ்வர விருது..!

Sharmi / Aug 22nd 2024, 8:51 am
image

தேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆசீர்வாதத்துடன்,  தேசிய கத்தோலிக்க வெகுசன ஊடக மத்திய நிலையமும், தேசிய கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம், இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 41 கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

இக்கலைஞர்கள் தேசிய ரீதியாகவும், மறைமாவட்டங்கள் ரீதியாகவும், பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

 மறைமாவட்டங்கள் ரீதியாக மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுக்கள், தமக்கு வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தல்களின் பிரகாரம் கலைஞர்களை இவ்விருது பெறுவதற்காக தெரிவுசெய்து அனுப்பியிருந்தார்கள். 

அந்தவகையில் யாழ். மறைமாவட்டத்திலிருந்து நால்வர் இவ்விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.

இசைத்துறையில் ஆனைக்கோட்டை பங்கை சேர்ந்த மடுத்தீனுப்பிள்ளை யேசுதாசனும், நாடகத்துறையில் பாசையூர் பங்கைச் சேர்ந்த  பிரான்சிஸ் யூல்ஸ் கொலின் மற்றும் மெலிஞ்சிமுனை பங்கை சேர்ந்த அந்தோனி யேசுதாஸ் ஆகியோரும்,  ஊடகதுறையில் பாண்டியன்தாழ்வு பங்கைச் சேர்ந்த செல்மர் எமில் இவ்விருதுகளை பெற்றுக்கொண்டார்கள். 

2018ஆம் ஆரம்பிக்கப்பட்ட இவ்விருது வழங்கும் நிகழ்வு நான்காவது தடவையாக இவ்வருடமும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் மறைமாவட்ட பங்குகள் ரீதியாக பல துறைகளிலும் பணியாற்றும் கலைஞர்களின் பணியின் பெருமைகளை வெளிக்கொணர்வதாகவும் இந்நிகழ்வு அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



யாழை சேர்ந்த நால்வருக்கு தர்மபிரபாஸ்வர விருது. தேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆசீர்வாதத்துடன்,  தேசிய கத்தோலிக்க வெகுசன ஊடக மத்திய நிலையமும், தேசிய கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம், இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 41 கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இக்கலைஞர்கள் தேசிய ரீதியாகவும், மறைமாவட்டங்கள் ரீதியாகவும், பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். மறைமாவட்டங்கள் ரீதியாக மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுக்கள், தமக்கு வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தல்களின் பிரகாரம் கலைஞர்களை இவ்விருது பெறுவதற்காக தெரிவுசெய்து அனுப்பியிருந்தார்கள். அந்தவகையில் யாழ். மறைமாவட்டத்திலிருந்து நால்வர் இவ்விருதுகளை பெற்றுக்கொண்டார்கள். இசைத்துறையில் ஆனைக்கோட்டை பங்கை சேர்ந்த மடுத்தீனுப்பிள்ளை யேசுதாசனும், நாடகத்துறையில் பாசையூர் பங்கைச் சேர்ந்த  பிரான்சிஸ் யூல்ஸ் கொலின் மற்றும் மெலிஞ்சிமுனை பங்கை சேர்ந்த அந்தோனி யேசுதாஸ் ஆகியோரும்,  ஊடகதுறையில் பாண்டியன்தாழ்வு பங்கைச் சேர்ந்த செல்மர் எமில் இவ்விருதுகளை பெற்றுக்கொண்டார்கள். 2018ஆம் ஆரம்பிக்கப்பட்ட இவ்விருது வழங்கும் நிகழ்வு நான்காவது தடவையாக இவ்வருடமும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் மறைமாவட்ட பங்குகள் ரீதியாக பல துறைகளிலும் பணியாற்றும் கலைஞர்களின் பணியின் பெருமைகளை வெளிக்கொணர்வதாகவும் இந்நிகழ்வு அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement