சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததுடன், விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்திருந்தார் என பௌத்த பிக்கு ஒருவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் பிரசாரத்திற்குத் தலைமை தாங்கும் தித்தகல்லே ஆனந்தசிறி தேரர், நேர்காணல் ஒன்றின்போதே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறைவாசம் காரணமாக ஞானசார தேரர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும், தனது உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்பில் பேசியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அவரிடம் விஷப் போத்தல் ஒன்று இருந்தது. அதனை அருந்திவிட்டு உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்தார்" என ஆனந்தசிறி தேரர் கூறியுள்ளார்.
எனினும், தாம் தலையிட்டு அவருடன் பேசி அந்த முடிவைக் கைவிடுமாறு சமாதானப்படுத்தியதாகவும், பின்னர் குறித்த விஷப் போத்தல் தூக்கி எறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் இடம்பெற்ற காலப்பகுதியில் தமக்கும் ஞானசார தேரருக்கும் இடையே கடுமையான கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதாகவும்
இருப்பினும், ஞானசார தேரரின் மனநிலை மற்றும் அவரது சிறைத்தண்டனை தொடர்பான சூழ்நிலைகளை அறிந்த பின்னரே அவருக்கு ஆதரவாகச் செயற்படத் தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிப்பதற்கான கையொப்பங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையையும் ஆனந்தசிறி தேரர் முன்னெடுத்து வருகின்றார்.
இதுவரையில் இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரசாரத்தை நிறுத்துமாறு தமக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், அதனைக் கைவிடுவதற்காக நிதியுதவி வழங்க முன்வந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் கையொப்பங்கள் அடங்கிய மனுவை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் வரை தமது நடவடிக்கையைத் தொடரப்போவதாக ஆனந்தசிறி தேரர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றாரா ஞானசார தேரர் சிறையில் என்ன நடந்தது பௌத்த பிக்குவின் பரபரப்பு தகவல் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததுடன், விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்திருந்தார் என பௌத்த பிக்கு ஒருவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் பிரசாரத்திற்குத் தலைமை தாங்கும் தித்தகல்லே ஆனந்தசிறி தேரர், நேர்காணல் ஒன்றின்போதே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.சிறைவாசம் காரணமாக ஞானசார தேரர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும், தனது உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்பில் பேசியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்."அவரிடம் விஷப் போத்தல் ஒன்று இருந்தது. அதனை அருந்திவிட்டு உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்தார்" என ஆனந்தசிறி தேரர் கூறியுள்ளார்.எனினும், தாம் தலையிட்டு அவருடன் பேசி அந்த முடிவைக் கைவிடுமாறு சமாதானப்படுத்தியதாகவும், பின்னர் குறித்த விஷப் போத்தல் தூக்கி எறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் இடம்பெற்ற காலப்பகுதியில் தமக்கும் ஞானசார தேரருக்கும் இடையே கடுமையான கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் இருப்பினும், ஞானசார தேரரின் மனநிலை மற்றும் அவரது சிறைத்தண்டனை தொடர்பான சூழ்நிலைகளை அறிந்த பின்னரே அவருக்கு ஆதரவாகச் செயற்படத் தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.இதற்கிடையில், ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிப்பதற்கான கையொப்பங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையையும் ஆனந்தசிறி தேரர் முன்னெடுத்து வருகின்றார்.இதுவரையில் இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.குறித்த பிரசாரத்தை நிறுத்துமாறு தமக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், அதனைக் கைவிடுவதற்காக நிதியுதவி வழங்க முன்வந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.எவ்வாறாயினும், எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் கையொப்பங்கள் அடங்கிய மனுவை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் வரை தமது நடவடிக்கையைத் தொடரப்போவதாக ஆனந்தசிறி தேரர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.