• Oct 09 2026

ஒரே இடம்... ஒரே நாள்... நூலிழையில் தப்பிய உயிர்கள்

Chithra / Oct 9th 2026, 1:55 pm
image


ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் ஒரே நாளில், ஒரே இடத்தில் இடம்பெற்ற இரண்டு மோட்டார் சைக்கிள் விபத்துகளும் அங்கிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளன.


குறித்த இரண்டு விபத்துகளும் நேற்று (ஒக்டோபர் 8) இடம்பெற்றுள்ளன. 


முதலாவது விபத்து பிற்பகல் 1 மணியளவிலும், இரண்டாவது விபத்து பிற்பகல் 3.30 மணியளவிலும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.


முதலாவது விபத்தின்போது மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் சறுக்கி விழுந்துள்ளது. 


இரண்டாவது விபத்தின்போது, மோட்டார் சைக்கிள் சறுக்கி எதிரே வந்த லொறியை நோக்கிச் சென்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி லொறியின் சக்கரங்களுக்கு மிக அருகில் வீழ்ந்துள்ளார். எனினும், அவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.


இந்த இரண்டு விபத்துகளிலும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஒரே இடத்தில் குறுகிய நேர இடைவெளியில் இரண்டு விபத்துகள் இடம்பெற்றுள்ளமை அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இதனால், குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இப்பகுதியில் விபத்துகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஒரே இடம். ஒரே நாள். நூலிழையில் தப்பிய உயிர்கள் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் ஒரே நாளில், ஒரே இடத்தில் இடம்பெற்ற இரண்டு மோட்டார் சைக்கிள் விபத்துகளும் அங்கிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளன.குறித்த இரண்டு விபத்துகளும் நேற்று (ஒக்டோபர் 8) இடம்பெற்றுள்ளன. முதலாவது விபத்து பிற்பகல் 1 மணியளவிலும், இரண்டாவது விபத்து பிற்பகல் 3.30 மணியளவிலும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.முதலாவது விபத்தின்போது மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் சறுக்கி விழுந்துள்ளது. இரண்டாவது விபத்தின்போது, மோட்டார் சைக்கிள் சறுக்கி எதிரே வந்த லொறியை நோக்கிச் சென்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி லொறியின் சக்கரங்களுக்கு மிக அருகில் வீழ்ந்துள்ளார். எனினும், அவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.இந்த இரண்டு விபத்துகளிலும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஒரே இடத்தில் குறுகிய நேர இடைவெளியில் இரண்டு விபத்துகள் இடம்பெற்றுள்ளமை அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.இதனால், குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இப்பகுதியில் விபத்துகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement