• Oct 09 2026

மக்களுக்கு வரிச்சுமை குறையுமா? 2–3 ஆண்டுகளில் வரவுள்ள மாற்றம்! ஜனாதிபதியின் அறிவிப்பு

Chithra / Oct 9th 2026, 12:09 pm
image


மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்கும் நோக்கில், எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பெறுமதி சேர் வரி (VAT) விகிதத்தைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


அலரி மாளிகையில் நேற்று (08) நடைபெற்ற 1,540 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கத்தின் அதிகரித்து வரும் செலவினங்களை முறையாக நிர்வகித்து, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பெறுமதி சேர் வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், அத்தியாவசிய கல்வி உபகரணங்கள் மற்றும் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


குழந்தைகள் கல்விக்காகப் புத்தகங்களை வாங்கும்போது வரிச்சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கக்கூடாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, இவ்வாறான வரிகளை நீக்குவதற்கான தேவை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதேவேளை, அரச ஊழியர்களின் வேதன அதிகரிப்புகளை நடைமுறைப்படுத்துவதுடன், வரிகளைக் குறைப்பதற்கும் அரச செலவினங்களை மிகவும் கவனமாக நிர்வகிக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


அரச துறையின் அடிப்படை வேதனத்தை மூன்று கட்டங்களாக அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் காரணமாக, 2027ஆம் ஆண்டளவில் அரசாங்கத்துக்கு மேலதிகமாக 330 பில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு வரிச்சுமை குறையுமா 2–3 ஆண்டுகளில் வரவுள்ள மாற்றம் ஜனாதிபதியின் அறிவிப்பு மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்கும் நோக்கில், எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பெறுமதி சேர் வரி (VAT) விகிதத்தைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் நேற்று (08) நடைபெற்ற 1,540 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்தின் அதிகரித்து வரும் செலவினங்களை முறையாக நிர்வகித்து, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பெறுமதி சேர் வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், அத்தியாவசிய கல்வி உபகரணங்கள் மற்றும் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.குழந்தைகள் கல்விக்காகப் புத்தகங்களை வாங்கும்போது வரிச்சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கக்கூடாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, இவ்வாறான வரிகளை நீக்குவதற்கான தேவை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை, அரச ஊழியர்களின் வேதன அதிகரிப்புகளை நடைமுறைப்படுத்துவதுடன், வரிகளைக் குறைப்பதற்கும் அரச செலவினங்களை மிகவும் கவனமாக நிர்வகிக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அரச துறையின் அடிப்படை வேதனத்தை மூன்று கட்டங்களாக அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் காரணமாக, 2027ஆம் ஆண்டளவில் அரசாங்கத்துக்கு மேலதிகமாக 330 பில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement