• Oct 09 2024

தேர்தல் பிரசாரத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனத்தை பயன்படுத்தினாரா நாமல்..?

Chithra / Oct 2nd 2024, 12:16 pm
image

Advertisement

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் நலன்புரித் திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனம் ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானதும் அடிப்படையற்றது நாமல் ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் ஷரோன் சமரநாயக்க ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அநுராதபுரத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நடத்தப்பட்ட முதலாவது பிரச்சாரக் கூட்டத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனம் பயன்படுத்தப்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் லங்கா மின்சார தனியார் நிறுவனம்  நடத்திய ஆரம்பக்கட்ட உள்ளக விசாரணையில், இந்த குற்றச்சாட்டு அரசியல் போட்டியின் அடிப்படையிலான பொய்யான குற்றச்சாட்டு என இது தொடர்பிலான எந்தவொரு விசாரணைக்கும் பூரண ஒத்துழைப்பினை வழங்க நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனத்தை பயன்படுத்தினாரா நாமல்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் நலன்புரித் திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனம் ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானதும் அடிப்படையற்றது நாமல் ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் ஷரோன் சமரநாயக்க ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அத்துடன், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அநுராதபுரத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நடத்தப்பட்ட முதலாவது பிரச்சாரக் கூட்டத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனம் பயன்படுத்தப்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் லங்கா மின்சார தனியார் நிறுவனம்  நடத்திய ஆரம்பக்கட்ட உள்ளக விசாரணையில், இந்த குற்றச்சாட்டு அரசியல் போட்டியின் அடிப்படையிலான பொய்யான குற்றச்சாட்டு என இது தொடர்பிலான எந்தவொரு விசாரணைக்கும் பூரண ஒத்துழைப்பினை வழங்க நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement