• Nov 05 2026

வெளிநாட்டில் ஆரம்பித்த தொடர்பு விபரீதத்தில் முடிந்ததா? - இருவர் உயிரிழப்பின் அதிர்ச்சி பின்னணி

Chithra / Nov 5th 2026, 10:55 am
image


கம்பளை, புஸ்ஸல்லாவை – தொரகல பகுதியில் ஒரு பிள்ளையின் தாயொருவரைக் கொன்றதாக கூறப்படும் நபர், சம்பவத்தின் பின்னர் வீட்டின் பின்புறத்தில் உள்ள கூரையில்  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவத்தில் டிலானி ஷானிகா தயானந்த மற்றும் சமன்சிறி அபேரத்ன ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்த பெண்ணுக்கு ஏழு வயதுடைய ஒரு பிள்ளை இருப்பதாகவும், அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த நபரே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


குறித்த பெண் நீண்டகாலமாக வெளிநாட்டில் பணியாற்றியுள்ளதுடன், அங்கு பணியாற்றிய காலத்தில் மொரகொல்லாகம பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வெளிநாட்டு வேலைவாய்ப்பை நிறைவுசெய்து நாடு திரும்பிய அவர், தனது சட்டபூர்வ கணவர் மற்றும் பிள்ளையுடன் வசித்து வந்துள்ளார். பின்னர் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறுகளைத் தொடர்ந்து கணவர் அவரைப் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.


இதனையடுத்து, பிள்ளையுடன் தனியாக வசித்து வந்த குறித்த பெண், வெளிநாட்டில் இருந்தபோது நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததாகக் கூறப்படும் நபரையும் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.


இந்நிலையில், நேற்று முன்தினம் (03) இரவு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் போது இந்தக் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் இடம்பெற்றபோது பிள்ளை வீட்டில் இருக்கவில்லை எனவும், தனது பாட்டியுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


நேற்று (04) பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பிள்ளை, தாயுடன் வசித்து வந்த சமன் மாமா என அழைக்கப்படும் நபர் வீட்டின் பின்புறக் கூரையில்  உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு, அது தொடர்பில் தனது சிறிய தாயாரிடம் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து அங்கு வந்த அயலவர்கள், பெண்ணின் வீடு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் படுக்கையில் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.


இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையை கம்பளை பிரதான நீதவான் சரசி பரணமான முன்னெடுத்துள்ளார்.


கம்பளை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தயால் இலங்ககோன் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் குணவர்தன ஆகியோரின் ஆலோசனையின் பேரில், புஸ்ஸல்லாவை பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் வக்கும்புர தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெளிநாட்டில் ஆரம்பித்த தொடர்பு விபரீதத்தில் முடிந்ததா - இருவர் உயிரிழப்பின் அதிர்ச்சி பின்னணி கம்பளை, புஸ்ஸல்லாவை – தொரகல பகுதியில் ஒரு பிள்ளையின் தாயொருவரைக் கொன்றதாக கூறப்படும் நபர், சம்பவத்தின் பின்னர் வீட்டின் பின்புறத்தில் உள்ள கூரையில்  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவத்தில் டிலானி ஷானிகா தயானந்த மற்றும் சமன்சிறி அபேரத்ன ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த பெண்ணுக்கு ஏழு வயதுடைய ஒரு பிள்ளை இருப்பதாகவும், அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த நபரே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த பெண் நீண்டகாலமாக வெளிநாட்டில் பணியாற்றியுள்ளதுடன், அங்கு பணியாற்றிய காலத்தில் மொரகொல்லாகம பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெளிநாட்டு வேலைவாய்ப்பை நிறைவுசெய்து நாடு திரும்பிய அவர், தனது சட்டபூர்வ கணவர் மற்றும் பிள்ளையுடன் வசித்து வந்துள்ளார். பின்னர் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறுகளைத் தொடர்ந்து கணவர் அவரைப் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து, பிள்ளையுடன் தனியாக வசித்து வந்த குறித்த பெண், வெளிநாட்டில் இருந்தபோது நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததாகக் கூறப்படும் நபரையும் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் (03) இரவு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் போது இந்தக் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் இடம்பெற்றபோது பிள்ளை வீட்டில் இருக்கவில்லை எனவும், தனது பாட்டியுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.நேற்று (04) பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பிள்ளை, தாயுடன் வசித்து வந்த சமன் மாமா என அழைக்கப்படும் நபர் வீட்டின் பின்புறக் கூரையில்  உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு, அது தொடர்பில் தனது சிறிய தாயாரிடம் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து அங்கு வந்த அயலவர்கள், பெண்ணின் வீடு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் படுக்கையில் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையை கம்பளை பிரதான நீதவான் சரசி பரணமான முன்னெடுத்துள்ளார்.கம்பளை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தயால் இலங்ககோன் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் குணவர்தன ஆகியோரின் ஆலோசனையின் பேரில், புஸ்ஸல்லாவை பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் வக்கும்புர தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement