அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகின் மிகபெ்பெரும் கோடிஸ்வரரான எலான் மஸ்க்கின் காலில் முத்தமிடுவது போன்ற வீடியோவொன்று அமெரிக்காவின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை (HUD) தலைமையகத்தின் Cafeteria (கஃபேட்டிரியா) திரைகளில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குறித்த வீடியோவில் ” நிஜ ராஜா நீடூழி வாழ்க’ (LONG LIVE THE REAL KING) என்ற வாசகமும் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் HUD இன் பாதுகாப்பு அமைப்புகளில் ஏற்பட்ட பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறது எனவும் இது டொனால்ட் ட்ரம்புக்கு பெரும் அவமானத்தை தேடித் தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் இடம்பெறக் காரணமானவர்கள் யார் என்பது தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாக HUD செய்தித் தொடர்பாளர் கேசி லவெட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், உண்மையில் அது தான் வெள்ளை மாளிகையில் நடக்கிறது எனவும் சில அமெரிகர்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்கின் காலை முத்தமிட்டாரா ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகின் மிகபெ்பெரும் கோடிஸ்வரரான எலான் மஸ்க்கின் காலில் முத்தமிடுவது போன்ற வீடியோவொன்று அமெரிக்காவின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை (HUD) தலைமையகத்தின் Cafeteria (கஃபேட்டிரியா) திரைகளில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குறித்த வீடியோவில் ” நிஜ ராஜா நீடூழி வாழ்க’ (LONG LIVE THE REAL KING) என்ற வாசகமும் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் HUD இன் பாதுகாப்பு அமைப்புகளில் ஏற்பட்ட பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறது எனவும் இது டொனால்ட் ட்ரம்புக்கு பெரும் அவமானத்தை தேடித் தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.இந்நிலையில் குறித்த சம்பவம் இடம்பெறக் காரணமானவர்கள் யார் என்பது தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாக HUD செய்தித் தொடர்பாளர் கேசி லவெட் தெரிவித்துள்ளார்.இதேவேளை குறித்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், உண்மையில் அது தான் வெள்ளை மாளிகையில் நடக்கிறது எனவும் சில அமெரிகர்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.