• Sep 08 2024

இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் தமது தேவைகள் நிறைவேற்றுவதில் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர் - விஜயலாதன் தெரிவிப்பு!

Tamil nila / Jul 20th 2024, 8:35 pm
image

Advertisement

இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இருந்தாலும்  மாற்றுத்திறனாளிகள் இப்போதும்  தமது  தேவைகள் நிறைவேற்றுவதில் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக விஜயகுமார் புதிய வாழ்வு  இல்லத்தின் இணைப்பாளர் விஜயகுமார் விஜயலாதன் தெரிவித்துள்ளார். 

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் 

இங்கு  கருத்து  தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களை பொறுத்தவரையிலே சமூகத்தின் மத்தியிலே ஒரு மாற்றுத்திறனாளி தன்னுடைய அன்றாட தேவைகளை பொதுச் சேவையிலும் அதாவது குடும்பத்திலிருந்து பொது இடங்களிலும் மருத்துவம் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகள் போன்ற எல்லா விடயங்களிலுமே பல்வேறுபட்ட அணுகும் வசதிகளை அவர்கள் இல்லாமல் சிரமத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எங்கள் நாடு வளர்ச்சி அடைந்திருந்த ஒரு நாடாக இருந்தாலும் சேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாக இருக்கின்றது. அதுகளான நிறுவனங்கள் அதனை நிவர்த்தி செய்து வந்தாலும் முழுமையாக எல்லாரையும் இந்த சேவைகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை.

எனவே என்றும் அவர் மாற்றுத்திறனாளிகள் பலர் அச்சத்தோடும் அனைத்து துறைகளிலும்  பூர்த்தி செய்ய முடியாத வசதி வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் தான் எங்களை பொறுத்தவரையில் இருந்து வருகின்றார்கள் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

அத்தோடு மாற்றுத்திறனாளிகளை மகிழ்வானர்களாக வைத்திருக்கும் களமாக புதிய வாழ்வு நிறுவனமும் சாவிகா சங்கீத அறிவாலயம் அமைப்பும் இணைந்து  வடக்கின் மாற்று திறனாளிகளுக்கான. இசைப்போட்டியை எதிர்வரும் 27 திகதி யாழ்ப்பாணம் மங்கயற்கரசி வித்தியாலயத்தில் முற்பகல் 09.00 மணியில் இருந்து நடாத்த உள்ளது இதற்கு மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் தமது தேவைகள் நிறைவேற்றுவதில் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர் - விஜயலாதன் தெரிவிப்பு இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இருந்தாலும்  மாற்றுத்திறனாளிகள் இப்போதும்  தமது  தேவைகள் நிறைவேற்றுவதில் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக விஜயகுமார் புதிய வாழ்வு  இல்லத்தின் இணைப்பாளர் விஜயகுமார் விஜயலாதன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இங்கு  கருத்து  தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,எங்களை பொறுத்தவரையிலே சமூகத்தின் மத்தியிலே ஒரு மாற்றுத்திறனாளி தன்னுடைய அன்றாட தேவைகளை பொதுச் சேவையிலும் அதாவது குடும்பத்திலிருந்து பொது இடங்களிலும் மருத்துவம் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகள் போன்ற எல்லா விடயங்களிலுமே பல்வேறுபட்ட அணுகும் வசதிகளை அவர்கள் இல்லாமல் சிரமத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.எங்கள் நாடு வளர்ச்சி அடைந்திருந்த ஒரு நாடாக இருந்தாலும் சேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாக இருக்கின்றது. அதுகளான நிறுவனங்கள் அதனை நிவர்த்தி செய்து வந்தாலும் முழுமையாக எல்லாரையும் இந்த சேவைகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை.எனவே என்றும் அவர் மாற்றுத்திறனாளிகள் பலர் அச்சத்தோடும் அனைத்து துறைகளிலும்  பூர்த்தி செய்ய முடியாத வசதி வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் தான் எங்களை பொறுத்தவரையில் இருந்து வருகின்றார்கள் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.அத்தோடு மாற்றுத்திறனாளிகளை மகிழ்வானர்களாக வைத்திருக்கும் களமாக புதிய வாழ்வு நிறுவனமும் சாவிகா சங்கீத அறிவாலயம் அமைப்பும் இணைந்து  வடக்கின் மாற்று திறனாளிகளுக்கான. இசைப்போட்டியை எதிர்வரும் 27 திகதி யாழ்ப்பாணம் மங்கயற்கரசி வித்தியாலயத்தில் முற்பகல் 09.00 மணியில் இருந்து நடாத்த உள்ளது இதற்கு மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement