• Dec 15 2024

மருந்துகளை கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலை - விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

Chithra / Dec 15th 2024, 7:55 am
image

 

மருந்துகளின் விலையை முறையாக நடைமுறைப்படுத்தியதன் பின்னர், எதிர்காலத்தில் அவற்றைக் குறைந்த விலையில் விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாகத் தேசிய ஓளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது மருந்துகளை கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதன்காரணமாக தற்போது மருந்துகளைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எனினும் எதிர்காலத்தில் மருந்து கொள்வனவு உள்ளிட்ட பிரச்சினைகள் நிவர்த்திக்கப்பட்டு,

அவற்றைக் குறைந்த விலையில் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஓளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

மருந்துகளை கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலை - விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்  மருந்துகளின் விலையை முறையாக நடைமுறைப்படுத்தியதன் பின்னர், எதிர்காலத்தில் அவற்றைக் குறைந்த விலையில் விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாகத் தேசிய ஓளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.தற்போது மருந்துகளை கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது மருந்துகளைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் எதிர்காலத்தில் மருந்து கொள்வனவு உள்ளிட்ட பிரச்சினைகள் நிவர்த்திக்கப்பட்டு,அவற்றைக் குறைந்த விலையில் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஓளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement