• Dec 15 2024

வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் பயன்பாட்டில்! – விசாரணை ஆரம்பம்

Chithra / Dec 15th 2024, 7:47 am
image

 

வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறான வாகனங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காகவும் சுங்க வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்களை வசூலிப்பதற்காகவும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இவற்றிற்கு ஒரு தீர்வாக வாகனத்தை கொள்வனவு செய்யும் நபர், வாகனத்தை வாங்குவதற்கு முன்னர், இறக்குமதி வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் முறையாக செலுத்தப்பட்டதா என்பதை சரிபார்க்க, சுங்கத்துறை இணைய தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம், ஒருவர் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படும் வாகனம் இலங்கைக்கு சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா மற்றும் முறையான வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் பயன்பாட்டில் – விசாரணை ஆரம்பம்  வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அவ்வாறான வாகனங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காகவும் சுங்க வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்களை வசூலிப்பதற்காகவும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.அதன்படி, இவற்றிற்கு ஒரு தீர்வாக வாகனத்தை கொள்வனவு செய்யும் நபர், வாகனத்தை வாங்குவதற்கு முன்னர், இறக்குமதி வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் முறையாக செலுத்தப்பட்டதா என்பதை சரிபார்க்க, சுங்கத்துறை இணைய தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இதன்மூலம், ஒருவர் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படும் வாகனம் இலங்கைக்கு சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா மற்றும் முறையான வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement