• Apr 03 2025

ஒரே நிகழ்விற்கு நான்கு உலங்கு வானூர்திகளில் யாழ்ப்பாணம் சென்ற முக்கியஸ்தர்கள்! அனுர வெளியிட்ட தகவல்

Chithra / Mar 17th 2024, 8:23 am
image

  

ஒரே நிகழ்வில் பங்கேற்பதற்காக நான்கு உலங்கு வானூர்திகளில் அரசாங்கத்தின் 4 முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணம் பயணம் செய்ததாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க  குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விமான படை கண்காட்சிக்காக இவ்வாறு நான்கு முக்கியஸ்தர்கள் நான்கு உலங்கு வானூர்திகளை பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி சாவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன ஆகியோர் இவ்வாறு தனித் தனியாக உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

ஒரே நிகழ்விற்கு நான்கு உலங்கு வானூர்திகளில் யாழ்ப்பாணம் சென்ற முக்கியஸ்தர்கள் அனுர வெளியிட்ட தகவல்   ஒரே நிகழ்வில் பங்கேற்பதற்காக நான்கு உலங்கு வானூர்திகளில் அரசாங்கத்தின் 4 முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணம் பயணம் செய்ததாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க  குற்றம் சுமத்தியுள்ளார்.வவுனியாவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விமான படை கண்காட்சிக்காக இவ்வாறு நான்கு முக்கியஸ்தர்கள் நான்கு உலங்கு வானூர்திகளை பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி சாவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன ஆகியோர் இவ்வாறு தனித் தனியாக உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement