• May 06 2024

வழிபாட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட துயரம்; பாரிய விபத்தில் ஒருவர் சாவு! 37 பேர் காயம்

Chithra / Mar 17th 2024, 8:29 am
image

Advertisement

 

கண்டி - நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாடு செய்வதற்காக 38 பக்தர்களுடன் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனை கொப்பேகடுவ சந்தியில் யஹலதன்ன பிரதேசத்தில் நேற்று (16) மாலை இந்த விபத்து இடம்பெற்றது.

பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நெல்லிகலையில் இருந்து பூண்டுலோயா நோக்கி பயணித்த நிலையில் பேருந்தின் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 15 மீற்றர் சரிவான வீதியில் சறுக்கிச் சென்று மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சாரதி உட்பட 38 பேர் காயமடைந்து, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் ஹல்பொல, பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த 79 வயதுடையவரே ஆவார்.

இதேவேளை காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வழிபாட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட துயரம்; பாரிய விபத்தில் ஒருவர் சாவு 37 பேர் காயம்  கண்டி - நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாடு செய்வதற்காக 38 பக்தர்களுடன் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பேராதனை கொப்பேகடுவ சந்தியில் யஹலதன்ன பிரதேசத்தில் நேற்று (16) மாலை இந்த விபத்து இடம்பெற்றது.பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நெல்லிகலையில் இருந்து பூண்டுலோயா நோக்கி பயணித்த நிலையில் பேருந்தின் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 15 மீற்றர் சரிவான வீதியில் சறுக்கிச் சென்று மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் சாரதி உட்பட 38 பேர் காயமடைந்து, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் உயிரிழந்தவர் ஹல்பொல, பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த 79 வயதுடையவரே ஆவார்.இதேவேளை காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement