• Nov 24 2024

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட திலீபனின் நினைவேந்தல்..!

Sharmi / Sep 26th 2024, 3:07 pm
image

தியாகி திலீபனின் 37 வது நினைவு தினம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று(26) அனுஸ்டிக்கப்பட்டது.  

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டுவரும் வவுனியா வீதி அபிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அமைந்துள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது திலீபனின் உருவருவ படத்திற்கு மலர்தூவி,ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.    

நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கும், தமிழர்களுக்குமான தீர்வு கிடைக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச பொறிமுறையூடாகவே எமது பிள்ளைகளை கண்டுபிடிக்க முடியும். நாம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புக்களை நாடியே எமது போராட்டங்களை முன்னெடுத்து நிற்கின்றோம் என்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட திலீபனின் நினைவேந்தல். தியாகி திலீபனின் 37 வது நினைவு தினம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று(26) அனுஸ்டிக்கப்பட்டது.  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டுவரும் வவுனியா வீதி அபிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அமைந்துள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது திலீபனின் உருவருவ படத்திற்கு மலர்தூவி,ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.    நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கும், தமிழர்களுக்குமான தீர்வு கிடைக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச பொறிமுறையூடாகவே எமது பிள்ளைகளை கண்டுபிடிக்க முடியும். நாம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புக்களை நாடியே எமது போராட்டங்களை முன்னெடுத்து நிற்கின்றோம் என்றனர்.

Advertisement

Advertisement

Advertisement