• Nov 19 2024

பொதுத் தேர்தலில் குறைவடைந்த பிரச்சாரங்கள்; அரசியல் ஈடுபாடுகளில் வீழ்ச்சி - பவ்ரல் அமைப்பு

Chithra / Nov 7th 2024, 1:39 pm
image

 

பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள்  போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான  வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில்  ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இது மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் குறைவடைந்த பிரச்சாரங்கள்; அரசியல் ஈடுபாடுகளில் வீழ்ச்சி - பவ்ரல் அமைப்பு  பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள்  போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான  வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில்  ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.இது மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement