• Oct 18 2024

நவீனமயப்படுத்தலில் உள்ள குறைபாடுகள் - புள்ளிவிபரங்கள் மிக சரியானதா? யாழ். அரச அதிபர் கேள்வி samugammedia

Chithra / May 10th 2023, 12:18 pm
image

Advertisement

யாழ் மாவட்ட செயலக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரக் கிளையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட அரச அதிபரின் தலைமையில் பிரதேச செயளாளர்கள் மற்றும் உதவிப் பிரதேச செயளாளர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று (10)  யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டப அறையில் இடம்பெற்றது.

இக் கருத்தரங்கில் யாழ் .மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் கருத்து தெரிவிக்கையில்

புள்ளி விபரவியல் திணைக்களத்தின் செயற்பாடானது ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகச் செயற்பாடுகளில் பெரும் பங்கு வகிக்கின்றது.

ஆனாலும் நவீனமயப்படுத்தலில் உள்ள  குறைபாடுகள் காரணமாக  உடனடியாக மாற்றங்களைச் செய்வதற்கும் அத் தகவல்களை ஆராய்ந்து மாற்றங்களைச் செய்வதற்குமான சந்தர்ப்பங்கள் குறைவாகக் காணப்படுகின்றது.

மத்திய வங்கியின் அறிக்கையாயினும் சரி புள்ளி விபரவியல் திணைக்களவியல் அறிக்கையாயினும் சரி காலங்கடந்த அறிக்கைகளாகவே  காணப்படுகின்றது. அவை உள்ளடக்க அறிக்கைகளாக மாற்றப்பட வேண்டும்.

இந்த நாட்டிலுள்ள சில கொள்கைகளின் காரணமாக புள்ளிவிபரங்கள் மிக சரியானதா என்ற கேள்வி காணப்படுகின்றது. 

தகவல்களைத் திரட்டுவதற்கு பயன்படுத்தப்படும் காலம், ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தப்படுத்தப்படும் காலம் என்பன குறித்த நோக்கங்களை அடைவதற்கு  ஏதுவான நிலைமை காணப்படுகின்றதா என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது.

ஆயினும் மாவட்ட மட்டத்தில் எமக்கு தேவையான போது அவ்வப்போது தகவல்களைத் திரட்டிக் கொள்கின்றோம்.

அதுவும் சில தருணங்களில் நிதியளிப்பவர்களின் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் அறிக்கைகளாகக் காணப்படும்.

இவ்வருடம்  திணைக்களத்தின் உரிய சட்ட விதிமுறைகளுக்கேற்ப முறையாக மேற்கொள்வதற்கு அனைத்து பிரதேச செயளாளர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.- என்றார்.


நவீனமயப்படுத்தலில் உள்ள குறைபாடுகள் - புள்ளிவிபரங்கள் மிக சரியானதா யாழ். அரச அதிபர் கேள்வி samugammedia யாழ் மாவட்ட செயலக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரக் கிளையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட அரச அதிபரின் தலைமையில் பிரதேச செயளாளர்கள் மற்றும் உதவிப் பிரதேச செயளாளர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று (10)  யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டப அறையில் இடம்பெற்றது.இக் கருத்தரங்கில் யாழ் .மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் கருத்து தெரிவிக்கையில்புள்ளி விபரவியல் திணைக்களத்தின் செயற்பாடானது ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகச் செயற்பாடுகளில் பெரும் பங்கு வகிக்கின்றது.ஆனாலும் நவீனமயப்படுத்தலில் உள்ள  குறைபாடுகள் காரணமாக  உடனடியாக மாற்றங்களைச் செய்வதற்கும் அத் தகவல்களை ஆராய்ந்து மாற்றங்களைச் செய்வதற்குமான சந்தர்ப்பங்கள் குறைவாகக் காணப்படுகின்றது.மத்திய வங்கியின் அறிக்கையாயினும் சரி புள்ளி விபரவியல் திணைக்களவியல் அறிக்கையாயினும் சரி காலங்கடந்த அறிக்கைகளாகவே  காணப்படுகின்றது. அவை உள்ளடக்க அறிக்கைகளாக மாற்றப்பட வேண்டும்.இந்த நாட்டிலுள்ள சில கொள்கைகளின் காரணமாக புள்ளிவிபரங்கள் மிக சரியானதா என்ற கேள்வி காணப்படுகின்றது. தகவல்களைத் திரட்டுவதற்கு பயன்படுத்தப்படும் காலம், ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தப்படுத்தப்படும் காலம் என்பன குறித்த நோக்கங்களை அடைவதற்கு  ஏதுவான நிலைமை காணப்படுகின்றதா என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது.ஆயினும் மாவட்ட மட்டத்தில் எமக்கு தேவையான போது அவ்வப்போது தகவல்களைத் திரட்டிக் கொள்கின்றோம்.அதுவும் சில தருணங்களில் நிதியளிப்பவர்களின் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் அறிக்கைகளாகக் காணப்படும்.இவ்வருடம்  திணைக்களத்தின் உரிய சட்ட விதிமுறைகளுக்கேற்ப முறையாக மேற்கொள்வதற்கு அனைத்து பிரதேச செயளாளர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement