• May 19 2024

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்திட்டத்திற்கு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் ஆதரவு..!samugammedia

Sharmi / May 10th 2023, 12:29 pm
image

Advertisement

வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றை தொடர்ந்தும் இளைய சமூகத்தினருக்கு  கடத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் வல்வெட்டித்துறை ஆலடிச் சந்தியில் நேற்றைய தினம்(09) காலை ஆரம்பிக்கப்பட்டது.



இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக மக்கள் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கிளிநொச்சியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



இன்று காலை 8:30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், யாழ் பல்கலை மாணவர்களுடன் இணைந்து பெரும் ஆதரவு நல்கியதுடன் பொதுமக்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கான செயற்பாட்டினை மேற்கொண்டனர்.




வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்புகள் போன்றவையும் அமோகமாக தமது ஆதரவினை தெரிவித்து கஞ்சிக்கான அரிசியினை யாழ் பல்கலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இவ்வாறாக யாழில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நிகழ்விற்கு யாழில் உள்ள மக்கள் பேராதரவினை நல்கியது போன்று கிளிநொச்சியிலுள்ள வர்த்தகர்களுடன் பொதுமக்களும் தமது ஆதரவுகளை வழங்கி இருந்தனர்.

அது மட்டுமன்றி முள்ளிவாய்க்கால் கஞ்சியை சிரட்டையில் வழங்குதல் வேண்டும் என்ற நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வீடுகளிற்கு சென்று ஒவ்வொரு வீட்டிலும் சிரட்டை திரட்டப்பட்டது.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பாடசாலைகள் மற்றும் வேறு பிரதேசங்களில் காய்ச்சி பரிமாறுவதற்கும் அந்த பகுதிகளை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களினை தொடர்ந்து ஆதரவினை தருமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.







முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்திட்டத்திற்கு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் ஆதரவு.samugammedia வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றை தொடர்ந்தும் இளைய சமூகத்தினருக்கு  கடத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் வல்வெட்டித்துறை ஆலடிச் சந்தியில் நேற்றைய தினம்(09) காலை ஆரம்பிக்கப்பட்டது.இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக மக்கள் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கிளிநொச்சியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 8:30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், யாழ் பல்கலை மாணவர்களுடன் இணைந்து பெரும் ஆதரவு நல்கியதுடன் பொதுமக்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கான செயற்பாட்டினை மேற்கொண்டனர்.வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்புகள் போன்றவையும் அமோகமாக தமது ஆதரவினை தெரிவித்து கஞ்சிக்கான அரிசியினை யாழ் பல்கலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர்.இவ்வாறாக யாழில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நிகழ்விற்கு யாழில் உள்ள மக்கள் பேராதரவினை நல்கியது போன்று கிளிநொச்சியிலுள்ள வர்த்தகர்களுடன் பொதுமக்களும் தமது ஆதரவுகளை வழங்கி இருந்தனர். அது மட்டுமன்றி முள்ளிவாய்க்கால் கஞ்சியை சிரட்டையில் வழங்குதல் வேண்டும் என்ற நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வீடுகளிற்கு சென்று ஒவ்வொரு வீட்டிலும் சிரட்டை திரட்டப்பட்டது. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பாடசாலைகள் மற்றும் வேறு பிரதேசங்களில் காய்ச்சி பரிமாறுவதற்கும் அந்த பகுதிகளை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களினை தொடர்ந்து ஆதரவினை தருமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement