• Jan 26 2025

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை தொடர்பான கலந்துரையாடல்

Thansita / Jan 16th 2025, 9:28 pm
image

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தி உரிமையாளர்களுடான கலந்துரையாடலானது  அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இன்றைய தினம் (17.12.2024) அரசாங்க அதிபர் அலுவலகத்தில்  காலை 10.30 மணிக்கு  நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவைகளில் ஏற்படும் தடங்கல்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

1.கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தியின் நேர ஒழுங்குகள் சீர் செய்யப்பட்டது.

2.மருதங்கேணி கட்டைக்காட்டிலிருந்து உடுத்துறைக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்து சபையின் பேருந்துச் சேவை மற்றும்  உசன் கெற்பெலி  பகுதிகளிலிருந்து சாவகச்சேரி நகருக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்து சபையின் பேருந்துச் சேவைகள் தொடர்பாக பாடசாலை மாணவர்களின் பாடசாலை நேரத்திற்கு அமைவாக நேர ஒழுங்குகள் சீர்செய்யப்பட்டுள்ளது.

3.அச்சுவேலி இராசபாதை ஊடாக யாழ்ப்பாண நகருக்கு வரும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரந்தில் பாடசாலை மாணவர்களுக்கான இடையூறு ஏற்படாதவகையில் பேருந்து சேவை நடைபெறுவதனை சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களைக் கொண்டு உறுதிசெய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர், இலங்கை போக்குவரத்துச் சபையின் முகாமையாளர் மற்றும் சாலை முகாமையாளர், தனியார் சிற்றூர்தியின் சங்கத் தலைவர் மற்றும் உரிமையாளர்கள், சிறுவர் மேம்பாட்டு மாவட்ட இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை தொடர்பான கலந்துரையாடல் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தி உரிமையாளர்களுடான கலந்துரையாடலானது  அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இன்றைய தினம் (17.12.2024) அரசாங்க அதிபர் அலுவலகத்தில்  காலை 10.30 மணிக்கு  நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவைகளில் ஏற்படும் தடங்கல்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.1.கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தியின் நேர ஒழுங்குகள் சீர் செய்யப்பட்டது.2.மருதங்கேணி கட்டைக்காட்டிலிருந்து உடுத்துறைக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்து சபையின் பேருந்துச் சேவை மற்றும்  உசன் கெற்பெலி  பகுதிகளிலிருந்து சாவகச்சேரி நகருக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்து சபையின் பேருந்துச் சேவைகள் தொடர்பாக பாடசாலை மாணவர்களின் பாடசாலை நேரத்திற்கு அமைவாக நேர ஒழுங்குகள் சீர்செய்யப்பட்டுள்ளது.3.அச்சுவேலி இராசபாதை ஊடாக யாழ்ப்பாண நகருக்கு வரும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரந்தில் பாடசாலை மாணவர்களுக்கான இடையூறு ஏற்படாதவகையில் பேருந்து சேவை நடைபெறுவதனை சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களைக் கொண்டு உறுதிசெய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர், இலங்கை போக்குவரத்துச் சபையின் முகாமையாளர் மற்றும் சாலை முகாமையாளர், தனியார் சிற்றூர்தியின் சங்கத் தலைவர் மற்றும் உரிமையாளர்கள், சிறுவர் மேம்பாட்டு மாவட்ட இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement