• May 22 2025

யாழில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

Chithra / May 21st 2025, 9:11 am
image

 

யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நேற்று மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரச அதிபர், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவேற்றிமுடிக்க வேண்டிய தேவைப்பாடுகளை வலியுறுத்தினார்.

மேலும், ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளின் முன்னேற்றத்தினை ஒவ்வொன்றாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

இக் கூட்டத்தினைத் தொடர்ந்து, அரச அதிபர் கடவுச்சீட்டு அலுவலகம் அமையவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளை நேரடியாக ஆய்வு செய்ததுடன், வேலைகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் பணிப்புரைகள் வழங்கப்பட்டது.


யாழில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்  யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடலானது நேற்று மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரச அதிபர், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவேற்றிமுடிக்க வேண்டிய தேவைப்பாடுகளை வலியுறுத்தினார்.மேலும், ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளின் முன்னேற்றத்தினை ஒவ்வொன்றாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார்.இக் கூட்டத்தினைத் தொடர்ந்து, அரச அதிபர் கடவுச்சீட்டு அலுவலகம் அமையவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளை நேரடியாக ஆய்வு செய்ததுடன், வேலைகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் பணிப்புரைகள் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement