• Jan 02 2025

புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடல்!

Tamil nila / Dec 19th 2024, 9:21 pm
image

புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்து, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை காலை கலந்துரையாடல் நடத்தினர்.

ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், ஆளுநர் அவர்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலராக கடந்த காலத்தில் பணியாற்றியமை நினைவுகூர்ந்தனர்.

மேலும், புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்க கட்டடத்தின் எஞ்சிய வேலைகளை நிறைவுசெய்வதற்கு நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்ததுடன், பிரதேசத்தின் வேறு பல தேவைகள் தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர். 


வர்த்தக சங்கத்தினரின் கோரிக்கைகளை சாதகமாக அணுகிய ஆளுநர், விரைவில் புதுக்குடியிருப்புக்கு வந்து அங்குள்ளவர்களை நேரில் சந்திப்பதாகவும் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடல் புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்து, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை காலை கலந்துரையாடல் நடத்தினர்.ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், ஆளுநர் அவர்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலராக கடந்த காலத்தில் பணியாற்றியமை நினைவுகூர்ந்தனர்.மேலும், புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்க கட்டடத்தின் எஞ்சிய வேலைகளை நிறைவுசெய்வதற்கு நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்ததுடன், பிரதேசத்தின் வேறு பல தேவைகள் தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர். வர்த்தக சங்கத்தினரின் கோரிக்கைகளை சாதகமாக அணுகிய ஆளுநர், விரைவில் புதுக்குடியிருப்புக்கு வந்து அங்குள்ளவர்களை நேரில் சந்திப்பதாகவும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now