• Jan 23 2025

களுவாஞ்சிக்குடியில் 51 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு

Chithra / Jan 12th 2025, 3:29 pm
image


மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி நகர் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் வெள்ள நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் லயன்ஸ் கழக அலுவலகத்தில் இடம்பெற்றது.

களுவாஞ்சிக்குடி நகர் லயன்ஸ் கழக தலைவர் லயன் சா.சரவணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் தலைவர்களான ஆனந்தராஜா, நல்லையா மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் பயனாளிகளுக்கு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.

இதன் போது அப்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிப்புற்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரிசி, சீனி, பால்மா, பிஸ்கட் போன்ற தலா 5000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 51 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

களுவாஞ்சிக்குடியில் 51 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி நகர் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் வெள்ள நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் லயன்ஸ் கழக அலுவலகத்தில் இடம்பெற்றது.களுவாஞ்சிக்குடி நகர் லயன்ஸ் கழக தலைவர் லயன் சா.சரவணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் தலைவர்களான ஆனந்தராஜா, நல்லையா மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் பயனாளிகளுக்கு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.இதன் போது அப்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிப்புற்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரிசி, சீனி, பால்மா, பிஸ்கட் போன்ற தலா 5000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 51 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement