• Jul 09 2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அங்கீகாரம்

Chithra / Jul 9th 2025, 8:47 am
image


அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

எந்தவொரு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் இன்றி அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன், 

சமூகத்தின் நல்லிருப்புக்கு அத்தியாவசியமான அறநெறிக் கல்வி அபிவிருத்திக்காக அறநெறி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவை வழங்குதல் மிகவும் பொருத்தமானது என இனங்காணப்பட்டுள்ளது. 

அதற்கமைய, 2026 ஆண்டு தொடக்கம் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதங்களுக்குரிய பதிவு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலைகளில் ஒரு ஆண்டு கால தொடர்ச்சியான சேவைக் காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவு அடங்கலான கொடுப்பனவாக ரூபா 7,500/- தொகையை ஆண்டுக்கு ஒரு தடவை செலுத்துவதற்காக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அங்கீகாரம் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எந்தவொரு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் இன்றி அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன், சமூகத்தின் நல்லிருப்புக்கு அத்தியாவசியமான அறநெறிக் கல்வி அபிவிருத்திக்காக அறநெறி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவை வழங்குதல் மிகவும் பொருத்தமானது என இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, 2026 ஆண்டு தொடக்கம் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதங்களுக்குரிய பதிவு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலைகளில் ஒரு ஆண்டு கால தொடர்ச்சியான சேவைக் காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவு அடங்கலான கொடுப்பனவாக ரூபா 7,500/- தொகையை ஆண்டுக்கு ஒரு தடவை செலுத்துவதற்காக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement