• Jan 13 2025

விசுவமடுவில் 160 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கல்

Tharmini / Jan 13th 2025, 9:44 am
image

முல்லைத்தீவு, விசுவமடுவில் 2025ம் ஆண்டு  தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கனடா மொன்றியல், வெஸ்ட் ஜலெண்ட் தமிழ் கலாசார சங்கத்தின் மூலமாக 160 குடும்பங்களுக்கான பொங்கல் பானை, பொங்கல்  பொருட்கள் மற்றும் உதவிப்பணமாக 500 ரூபாய் என்பன வழங்கி வைக்கப்பட்டது 

குறித்த நிகழ்வு நேற்று (12) விசுவமடுவில் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்றது.

கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்  மற்றும்  சமூக செயற்பாட்டாளர்கள்  கலந்து கொண்டு குறித்த பொருட்களை வழங்கி வைத்தனர் 

கனடா மொன்றியல் வெஸ்ட் ஜலெண்ட் தமிழ் கலாசார சங்கம் தமிழர்களின் மரபுத்திங்கள் தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக 3வது ஆண்டாக இந்த பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.





விசுவமடுவில் 160 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கல் முல்லைத்தீவு, விசுவமடுவில் 2025ம் ஆண்டு  தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கனடா மொன்றியல், வெஸ்ட் ஜலெண்ட் தமிழ் கலாசார சங்கத்தின் மூலமாக 160 குடும்பங்களுக்கான பொங்கல் பானை, பொங்கல்  பொருட்கள் மற்றும் உதவிப்பணமாக 500 ரூபாய் என்பன வழங்கி வைக்கப்பட்டது குறித்த நிகழ்வு நேற்று (12) விசுவமடுவில் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்றது.கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்  மற்றும்  சமூக செயற்பாட்டாளர்கள்  கலந்து கொண்டு குறித்த பொருட்களை வழங்கி வைத்தனர் கனடா மொன்றியல் வெஸ்ட் ஜலெண்ட் தமிழ் கலாசார சங்கம் தமிழர்களின் மரபுத்திங்கள் தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக 3வது ஆண்டாக இந்த பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement