• Nov 28 2024

திருமலையில் பிரதேச ஊடகவியலாளர் அதிரடியாக கைது...! நடந்தது என்ன?

Sharmi / May 8th 2024, 10:39 am
image

திருமலையில் போதைமாத்திரைகளுடன் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஔவை நகர் பகுதியில் வைத்து பிரதேச ஊடகவியலாளர் ஒருவரை போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பிரதான வீதி, ரொட்டவெவ, மொறவெவ பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது இவரிடமிருந்து 30 போதை தரும்  மாத்திரைகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

திருகோணமலையில் உள்ள மருந்தகம் ஒன்றில் கொள்வனவு செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரனை மூலமாக தெரியவருகிறது.

அத்துடன் ஒரு தொகை போக்குவரத்து ஆவணங்களும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த ஊடகவியலாளர் அரச, தனியார் ஊடகங்களில் பிரதேச செய்தியாளராகவும் கடமையாற்றி வருகிறார். 

கைது செய்யப்பட்ட நபரை மொறவெவ நீதிமன்ற நீதவான் முன்னிலையில்(06) ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

திருமலையில் பிரதேச ஊடகவியலாளர் அதிரடியாக கைது. நடந்தது என்ன திருமலையில் போதைமாத்திரைகளுடன் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஔவை நகர் பகுதியில் வைத்து பிரதேச ஊடகவியலாளர் ஒருவரை போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பிரதான வீதி, ரொட்டவெவ, மொறவெவ பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது இவரிடமிருந்து 30 போதை தரும்  மாத்திரைகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலையில் உள்ள மருந்தகம் ஒன்றில் கொள்வனவு செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரனை மூலமாக தெரியவருகிறது.அத்துடன் ஒரு தொகை போக்குவரத்து ஆவணங்களும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஊடகவியலாளர் அரச, தனியார் ஊடகங்களில் பிரதேச செய்தியாளராகவும் கடமையாற்றி வருகிறார். கைது செய்யப்பட்ட நபரை மொறவெவ நீதிமன்ற நீதவான் முன்னிலையில்(06) ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement