• Apr 02 2025

6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலர் யாழ். போதனா வைத்தியசாலையில் மரணம்!

Thansita / Mar 31st 2025, 11:33 pm
image

விபத்தில் சிக்கி கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது

 மடு - கற்கிரந்தகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய  சகாயராஜா யேசுதாஸ் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அநுராதபுரம் வீதியில்இ மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது நடந்து சென்றவர் மீது மோதினார். இதன்போது நடந்து சென்ற நபர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் குறித்த நபர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் மதவாச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 2 மாதங்கள் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 அதன்பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு 4 மாதங்கள் கோமா நிலையில் சிகிச்சை பெற்றார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலர் யாழ். போதனா வைத்தியசாலையில் மரணம் விபத்தில் சிக்கி கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது மடு - கற்கிரந்தகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய  சகாயராஜா யேசுதாஸ் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அநுராதபுரம் வீதியில்இ மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது நடந்து சென்றவர் மீது மோதினார். இதன்போது நடந்து சென்ற நபர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் குறித்த நபர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.பின்னர் மதவாச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 2 மாதங்கள் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு 4 மாதங்கள் கோமா நிலையில் சிகிச்சை பெற்றார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement