• Apr 02 2025

பால் தேநீரின் விலையை அதிகரிக்கத் தீர்மானம்

Thansita / Mar 31st 2025, 11:48 pm
image

இன்று (31) நள்ளிரவு முதல்  பால் தேநீரின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவு விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பால், தேநீரின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது

நாளை (01) முதல் பால் மாவின் விலையை 4.7 சதவீதத்தால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள்  தீர்மானித்தனர்.

அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மாவின் விலை  50 ரூபாயால் அதிகரிக்கவுள்ளது.  


இதனால் பால், தேநீரின் விலைஅதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பால் தேநீரின் விலையை அதிகரிக்கத் தீர்மானம் இன்று (31) நள்ளிரவு முதல்  பால் தேநீரின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவு விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பால், தேநீரின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளதுநாளை (01) முதல் பால் மாவின் விலையை 4.7 சதவீதத்தால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள்  தீர்மானித்தனர்.அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மாவின் விலை  50 ரூபாயால் அதிகரிக்கவுள்ளது.  இதனால் பால், தேநீரின் விலைஅதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement