• Aug 14 2025

ஜனநாயக வழி போராட்டத்தை வன்முறை வழி நோக்கி செல்ல இடமளிக்க வேண்டாம்; காணிகளை இழந்த வலி. வடக்கு உரிமையார்கள் எச்சரிக்கை

Chithra / Aug 13th 2025, 4:14 pm
image


வலி வடக்கு மக்களின் உணர்வுகளில் அரசும் அரச அதிகாரிகளும் அக்கறை கொண்டு அவர்கள் முன்னெடுத்துவரும் ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அவதானம் செலுத்த வேண்டும் என வலி. வடக்கு மீழ் குடியேற்ற சங்க உறுப்பினர் அன்ரனி சுபாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காணிகளை இழந்த வலி வடக்கு உரிமையார்கள் யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று ஊடக சந்திபொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில் 

நாம் எமது பூர்வீக நிலங்களையே மீளப்பெறும் நோக்குடன் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

ஆனால் அரசுகள் மாறினாலும் அரச பொறிமுறையிலோ அரச அதிகாரிகளின் மனோநிலையிலோ மாற்றங்கள் ஏதும் இல்லாதுள்ளது.

நாம் எமது நிலத்துக்காம போராடிப் போராடி சந்ததிகளை கடந்துகொண்டிருக்கின்றோம். ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை.

எமது ஜனநாயக வழி போராட்டத்தை தொடர்ந்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருக்குமானால் அது கடந்த காலங்கள் போன்று வன்முறை வழிமுறைக்கும் செல்லும் ஆபத்து இருக்கின்றது.

இந்த மாற்றங்கள் உருவாகாது தீர்வை கொடுக்கவேண்டியது அரசின் பொறுப்பாகும்.

நாம் தொடர்ந்தும் அகிம்சை வழியிலா அல்லது வன்முறை வழியிலா போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டியது இன்றைய அரசின் பொறிமுறையில்தான் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது.


ஜனநாயக வழி போராட்டத்தை வன்முறை வழி நோக்கி செல்ல இடமளிக்க வேண்டாம்; காணிகளை இழந்த வலி. வடக்கு உரிமையார்கள் எச்சரிக்கை வலி வடக்கு மக்களின் உணர்வுகளில் அரசும் அரச அதிகாரிகளும் அக்கறை கொண்டு அவர்கள் முன்னெடுத்துவரும் ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அவதானம் செலுத்த வேண்டும் என வலி. வடக்கு மீழ் குடியேற்ற சங்க உறுப்பினர் அன்ரனி சுபாஸ் வலியுறுத்தியுள்ளார்.காணிகளை இழந்த வலி வடக்கு உரிமையார்கள் யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று ஊடக சந்திபொன்றை மேற்கொண்டனர்.இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாம் எமது பூர்வீக நிலங்களையே மீளப்பெறும் நோக்குடன் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.ஆனால் அரசுகள் மாறினாலும் அரச பொறிமுறையிலோ அரச அதிகாரிகளின் மனோநிலையிலோ மாற்றங்கள் ஏதும் இல்லாதுள்ளது.நாம் எமது நிலத்துக்காம போராடிப் போராடி சந்ததிகளை கடந்துகொண்டிருக்கின்றோம். ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை.எமது ஜனநாயக வழி போராட்டத்தை தொடர்ந்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருக்குமானால் அது கடந்த காலங்கள் போன்று வன்முறை வழிமுறைக்கும் செல்லும் ஆபத்து இருக்கின்றது.இந்த மாற்றங்கள் உருவாகாது தீர்வை கொடுக்கவேண்டியது அரசின் பொறுப்பாகும்.நாம் தொடர்ந்தும் அகிம்சை வழியிலா அல்லது வன்முறை வழியிலா போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டியது இன்றைய அரசின் பொறிமுறையில்தான் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement