மறு அறிவித்தல் வரை எந்தவொரு கலால் உரிமத்தையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலால் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்க காலத்தில் நாட்டில் மொத்தம் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்று அது தொடர்பிலான முழு விபரங்களையும் அவர் சபையில் சமர்ப்பித்தார்.
கடந்த அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்துக்கு 32 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் கிழக்கு மாகாணத்துக்கு 22 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் நாடு முழுவதிலும் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இவ்வாறான பின்னணியிலேயே ஜனாதிபதி மேற்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மறு அறிவித்தல்வரை எந்தவொரு கலால் உரிமத்தையும் வழங்க வேண்டாம் ஜனாதிபதி அதிரடி உத்தரவு மறு அறிவித்தல் வரை எந்தவொரு கலால் உரிமத்தையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலால் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்க காலத்தில் நாட்டில் மொத்தம் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.நேற்று அது தொடர்பிலான முழு விபரங்களையும் அவர் சபையில் சமர்ப்பித்தார்.கடந்த அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்துக்கு 32 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் கிழக்கு மாகாணத்துக்கு 22 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் நாடு முழுவதிலும் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.இவ்வாறான பின்னணியிலேயே ஜனாதிபதி மேற்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.