• Nov 24 2024

மறு அறிவிப்பு வரும் வரை கடற்பரப்புகளில் பயணிக்க வேண்டாம்! - மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Chithra / May 31st 2024, 9:25 am
image

 

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கலாம் என்பதால் மறு அறிவித்தல் வரை மன்னாரிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடற்றொழில் மேற்கொள்ள வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினரை அறிவித்துள்ளது.

மேலும் நாட்டில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும், மத்திய, தென், ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


மறு அறிவிப்பு வரும் வரை கடற்பரப்புகளில் பயணிக்க வேண்டாம் - மக்களுக்கு அவசர எச்சரிக்கை  தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கலாம் என்பதால் மறு அறிவித்தல் வரை மன்னாரிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடற்றொழில் மேற்கொள்ள வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினரை அறிவித்துள்ளது.மேலும் நாட்டில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.மேலும், மத்திய, தென், ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement