சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மகளிர்,சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் மண்முனை வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு மரதன் ஓட்ட நிகழ்வு இன்று(31) காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது இளைஞர்கள் மத்தியில் புகைத்தல் மற்றும் மது ஒழிப்பினை விழிப்பூட்டும் வகையில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குகொண்டவர்களுக்கு போதையிலிருந்து இளைஞர்களை பாதுகாப்போம்’ என்னும் ஸ்டிக்கர்கள் மாவட்ட மாவட்ட செயலாளரால் ஒட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரனின் ஒழுங்கமைப்பில் மரதன் ஓட்ட நிகழ்வு மாவட்ட செயலாளரினால் கொடியசைத்து ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த மரதன் ஓட்டப்போட்டியானது இளைஞர்கள் மத்தியில்போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்வாக நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு மரதன் ஓட்ட நிகழ்வு. சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மகளிர்,சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் மண்முனை வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு மரதன் ஓட்ட நிகழ்வு இன்று(31) காலை நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இதன்போது இளைஞர்கள் மத்தியில் புகைத்தல் மற்றும் மது ஒழிப்பினை விழிப்பூட்டும் வகையில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குகொண்டவர்களுக்கு போதையிலிருந்து இளைஞர்களை பாதுகாப்போம்’ என்னும் ஸ்டிக்கர்கள் மாவட்ட மாவட்ட செயலாளரால் ஒட்டப்பட்டது.அதனை தொடர்ந்து மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரனின் ஒழுங்கமைப்பில் மரதன் ஓட்ட நிகழ்வு மாவட்ட செயலாளரினால் கொடியசைத்து ஆரம்பித்துவைக்கப்பட்டது.இந்த மரதன் ஓட்டப்போட்டியானது இளைஞர்கள் மத்தியில்போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்வாக நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.