கண் மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சையின் போது நோயாளியை ஒருவரை தாக்குகிற விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அயர் சீனா குழுமத்தின் கண் மருத்துவமனைகளில் ஒன்று குய்காங் பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு 2019-ல் சிகிச்சை பெற வந்த 82 வயது மூதாட்டியை மருத்துவ அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர் ஒருவர் தாக்கும் சிசிடிவி பதிவுகள் தற்போது வைரலாகி உள்ளன.
காணொளியில் நோயாளி, மருத்துவரின் எச்சரிக்கைகளைக் கவனிக்காமல் அறுவை சிகிச்சையின் போது கண்ணைக் கைகளைக் கொண்டு தேய்க்க முயற்சிக்கிறார்.
இதனால் சினம் அடைந்து பொறுமை இழந்த மருத்துவர் அவரைத் தாக்கும் நிலையில் படபடப்புக்குள்ளான நோயாளியை அருகில் உள்ள செவிலியர் பிடிப்பது போல அந்த விடியோவில் உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அயர் சீனா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அறுவை சிகிச்சையின் போது கண்பகுதியில் கைகள் பட்டால் எளிதாக தொற்று ஏற்படும். அந்த அபாயத்தைத் தவிர்க்கவே மருத்துவர் அவ்வாறு நடந்து கொண்டார் எனவும் மருத்துவர் உள்பட மருத்துவமனை நிர்வாக அதிகாரியும் பணி நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் அந்த மூதாட்டிக்கு இடது கண் முற்றிலும் செயலிழந்துள்ளதாகவும் இந்த சம்பவத்தால் அது ஏற்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்த விடியோவை வெளியிட்டவர் வுஹான் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ஐ ஃபென் என தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கும் அயர் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் முன்பே பகை இருந்ததாகவும் அதனால் அவர் இந்த விடியோவைத் தற்போது வெளியிட்டதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்ற நிலையில் குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சையின் போது நோயாளியைத் தாக்கும் மருத்துவர்- வெளியான அதிர்ச்சி பின்னணி.Samugammedia கண் மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சையின் போது நோயாளியை ஒருவரை தாக்குகிற விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், அயர் சீனா குழுமத்தின் கண் மருத்துவமனைகளில் ஒன்று குய்காங் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 2019-ல் சிகிச்சை பெற வந்த 82 வயது மூதாட்டியை மருத்துவ அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர் ஒருவர் தாக்கும் சிசிடிவி பதிவுகள் தற்போது வைரலாகி உள்ளன.காணொளியில் நோயாளி, மருத்துவரின் எச்சரிக்கைகளைக் கவனிக்காமல் அறுவை சிகிச்சையின் போது கண்ணைக் கைகளைக் கொண்டு தேய்க்க முயற்சிக்கிறார்.இதனால் சினம் அடைந்து பொறுமை இழந்த மருத்துவர் அவரைத் தாக்கும் நிலையில் படபடப்புக்குள்ளான நோயாளியை அருகில் உள்ள செவிலியர் பிடிப்பது போல அந்த விடியோவில் உள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் அயர் சீனா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறுவை சிகிச்சையின் போது கண்பகுதியில் கைகள் பட்டால் எளிதாக தொற்று ஏற்படும். அந்த அபாயத்தைத் தவிர்க்கவே மருத்துவர் அவ்வாறு நடந்து கொண்டார் எனவும் மருத்துவர் உள்பட மருத்துவமனை நிர்வாக அதிகாரியும் பணி நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.அத்துடன் அந்த மூதாட்டிக்கு இடது கண் முற்றிலும் செயலிழந்துள்ளதாகவும் இந்த சம்பவத்தால் அது ஏற்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.இந்த விடியோவை வெளியிட்டவர் வுஹான் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ஐ ஃபென் என தெரிவிக்கப்படுகின்றது.அவருக்கும் அயர் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் முன்பே பகை இருந்ததாகவும் அதனால் அவர் இந்த விடியோவைத் தற்போது வெளியிட்டதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்ற நிலையில் குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.