• Sep 17 2024

மனைவியின் வீட்டில் சடலமாகமீட்கப்பட்ட வைத்தியர்; நடந்தது என்ன? அனுராதபுரத்தில் சம்பவம்

Chithra / Aug 12th 2024, 7:59 am
image

Advertisement

 

அனுராதபுரம் - ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தியரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சடலம் இன்று காலை (12) மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் கெப்பித்திக்கொல்லாவ சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வரும் 38 வயதுடைய சாமர சதுரங்க எனவும் தெரிய வந்துள்ளது.

வைத்தியரின் மனைவி தம்புத்தேகம வைத்தியசாலையில் தாதியராக கடமை ஆற்றி வருகிறார்.

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேவ பகுதியில் மனைவியின் தாயாரின் வீட்டில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த வைத்தியரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும்,

விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவியின் வீட்டில் சடலமாகமீட்கப்பட்ட வைத்தியர்; நடந்தது என்ன அனுராதபுரத்தில் சம்பவம்  அனுராதபுரம் - ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தியரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சடலம் இன்று காலை (12) மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இவ்வாறு மீட்கப்பட்டவர் கெப்பித்திக்கொல்லாவ சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வரும் 38 வயதுடைய சாமர சதுரங்க எனவும் தெரிய வந்துள்ளது.வைத்தியரின் மனைவி தம்புத்தேகம வைத்தியசாலையில் தாதியராக கடமை ஆற்றி வருகிறார்.ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேவ பகுதியில் மனைவியின் தாயாரின் வீட்டில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.உயிரிழந்த வைத்தியரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும்,விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement