சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான மற்றும் பாதுகாப்பான அகச் சூழல் ஏற்படுத்தப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டவர், குறித்த தினத்திலிருந்து வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு தான்தோன்றித்தனமான முடிவுகளூடாகவும் வாய்மொழி துன்புறுத்தல்களாலும் வேலையை தொடர்வதற்கு பாதுகாப்பற்ற அகச்சூழலை ஏற்படுத்தியிருந்தார்.
இதன் உச்சகட்டமாக எந்தவித மனிதாபிமாணமுமின்றி தன்னுடைய கடந்த கால காழ்ப்புணர்வுகளால் பிரசவ விடுமுறையில் இருந்த வைத்தியர்களை தாய் சேய் நலன்களை கருத்தில் கொள்ளாமல் உடனடியாக தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளியேறவும், இடமாற்றத்தை பெற்று செல்லவும் பணித்துள்ளார்.
இதனால் வைத்தியர்கள் உட்பட ஊழியர்கள் தொடர்ந்து வேலையை முன்னெடுத்து செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேற்படி விடயங்கள் மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் சமன் பத்திரணவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் மேற்கொண்ட கள விஐயத்தின் பின்பு, சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகரை உடனடியாக மாகாண சுகாதார திணைக்களத்திற்கு மாற்றலாகுமாறு எழுத்துமுலம் தெரியப்படுத்தியும்,
அவர் மாகாண சுகாதார திணைக்களப் பணிப்பாளரின் கட்டளைக்கு கீழ்படியாமல் தெடர்ந்தும் அதார வைத்தியசாலை அத்தியட்சகர் அலுவலகத்தில் இருந்துகொண்டு வைத்தியர்கள உட்பட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி பாதுகாப்பற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.
இதை கண்டித்து உடனடியாக வைத்திய அத்தியட்சகரை மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளரின் அறிவுறுத்தல்களுக்கமைய மாகாண சுகாதார பணிமனைக்கு இடமாற்றி வைத்தியசாலையில் சேவையினை வழங்க ஏதுவான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தும்வரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் அனைவரையும் தொழிற்சங்க நடவடிக்கையாக இன்று(04) காலை 8 மணி தொடக்கம் யாழ் பிராந்திய சுகாதார பணிமனையில் இணைக்கப்படவுள்ளனர். என்றுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான மற்றும் பாதுகாப்பான அகச் சூழல் ஏற்படுத்தப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டவர், குறித்த தினத்திலிருந்து வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு தான்தோன்றித்தனமான முடிவுகளூடாகவும் வாய்மொழி துன்புறுத்தல்களாலும் வேலையை தொடர்வதற்கு பாதுகாப்பற்ற அகச்சூழலை ஏற்படுத்தியிருந்தார்.இதன் உச்சகட்டமாக எந்தவித மனிதாபிமாணமுமின்றி தன்னுடைய கடந்த கால காழ்ப்புணர்வுகளால் பிரசவ விடுமுறையில் இருந்த வைத்தியர்களை தாய் சேய் நலன்களை கருத்தில் கொள்ளாமல் உடனடியாக தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளியேறவும், இடமாற்றத்தை பெற்று செல்லவும் பணித்துள்ளார்.இதனால் வைத்தியர்கள் உட்பட ஊழியர்கள் தொடர்ந்து வேலையை முன்னெடுத்து செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேற்படி விடயங்கள் மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் சமன் பத்திரணவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் மேற்கொண்ட கள விஐயத்தின் பின்பு, சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகரை உடனடியாக மாகாண சுகாதார திணைக்களத்திற்கு மாற்றலாகுமாறு எழுத்துமுலம் தெரியப்படுத்தியும்,அவர் மாகாண சுகாதார திணைக்களப் பணிப்பாளரின் கட்டளைக்கு கீழ்படியாமல் தெடர்ந்தும் அதார வைத்தியசாலை அத்தியட்சகர் அலுவலகத்தில் இருந்துகொண்டு வைத்தியர்கள உட்பட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி பாதுகாப்பற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.இதை கண்டித்து உடனடியாக வைத்திய அத்தியட்சகரை மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளரின் அறிவுறுத்தல்களுக்கமைய மாகாண சுகாதார பணிமனைக்கு இடமாற்றி வைத்தியசாலையில் சேவையினை வழங்க ஏதுவான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தும்வரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் அனைவரையும் தொழிற்சங்க நடவடிக்கையாக இன்று(04) காலை 8 மணி தொடக்கம் யாழ் பிராந்திய சுகாதார பணிமனையில் இணைக்கப்படவுள்ளனர். என்றுள்ளது.