வைத்தியர்களுக்கான பாதுகாப்பின்மை வலுவடைந்துள்ளதாகவும், இந்த நிலைமை நீடித்தால் நாட்டில் மீண்டும் வைத்தியர்களின் வெளியேற்றம் கடுமையாக அதிகரிக்குமென்றும் வைத்திய தொழிற்சங்க ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனடிப்படையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான சம்பளம், மேலதிக கொடுப்பனவு மற்றும் வருமான வரி தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் நிலைபேறான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்வரும் நாட்களில் நாட்டை விட்டு வெளியேறும் கனிஷ்ட, தரம் உயர்த்தப்பட்ட மற்றும் சிரேஷ்ட வைத்தியர்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளை விட அதிகரிக்கக் கூடும் என வைத்திய மற்றும் சிவில் உரிமை தொடர்பான வைத்திய தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் ஜீ.ஜீ.சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
வைத்தியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் கடந்த ஐந்து வருடங்களில் 2,000 வரையான வைத்தியர்கள் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார்கள்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 31 ஆம் திகதி வைத்தியத்துறையிலிருக்கும் வைத்தியர்கள் தமது வருமான வரி ஆவணங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வரிகளைச் செலுத்த வேண்டியிருந்தது.
இந்தப் பின்னணியில் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பில் வைத்தியர்கள் மத்தியில் மீண்டும் கருத்துகள் வெளிப்பட ஆரம்பமாகியுள்ளன.
வைத்தியர்களுக்கு கிடைக்கும் அடிப்படைச் சம்பளம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது.
அநேகமாக 40,000 – 80,000 ரூபா என்ற வரையறையிலேயே அடிப்படைச் சம்பளத்தில் மாற்றம் ஏற்படுகிறது.
தற்போதைய அரசாங்கத்தின் வரி கொள்கைக்கமைய செலுத்தப்படும் சம்பளத்தில் வருமான வரி குறைப்பும் இடம்பெறுகிறது. என்றார்.
நாட்டில் மீண்டும் வைத்தியர்களின் வெளியேற்றம் தீவிரமாகும் நிலை அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வைத்தியர்களுக்கான பாதுகாப்பின்மை வலுவடைந்துள்ளதாகவும், இந்த நிலைமை நீடித்தால் நாட்டில் மீண்டும் வைத்தியர்களின் வெளியேற்றம் கடுமையாக அதிகரிக்குமென்றும் வைத்திய தொழிற்சங்க ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதனடிப்படையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான சம்பளம், மேலதிக கொடுப்பனவு மற்றும் வருமான வரி தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் நிலைபேறான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்வரும் நாட்களில் நாட்டை விட்டு வெளியேறும் கனிஷ்ட, தரம் உயர்த்தப்பட்ட மற்றும் சிரேஷ்ட வைத்தியர்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளை விட அதிகரிக்கக் கூடும் என வைத்திய மற்றும் சிவில் உரிமை தொடர்பான வைத்திய தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் ஜீ.ஜீ.சமல் சஞ்சீவ தெரிவித்தார்.வைத்தியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் கடந்த ஐந்து வருடங்களில் 2,000 வரையான வைத்தியர்கள் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார்கள். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 31 ஆம் திகதி வைத்தியத்துறையிலிருக்கும் வைத்தியர்கள் தமது வருமான வரி ஆவணங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வரிகளைச் செலுத்த வேண்டியிருந்தது.இந்தப் பின்னணியில் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பில் வைத்தியர்கள் மத்தியில் மீண்டும் கருத்துகள் வெளிப்பட ஆரம்பமாகியுள்ளன.வைத்தியர்களுக்கு கிடைக்கும் அடிப்படைச் சம்பளம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. அநேகமாக 40,000 – 80,000 ரூபா என்ற வரையறையிலேயே அடிப்படைச் சம்பளத்தில் மாற்றம் ஏற்படுகிறது.தற்போதைய அரசாங்கத்தின் வரி கொள்கைக்கமைய செலுத்தப்படும் சம்பளத்தில் வருமான வரி குறைப்பும் இடம்பெறுகிறது. என்றார்.