• Mar 04 2025

UK இற்கு ஓடிய வைத்தியர்கள்! அர்ச்சுனா எம்பி சபையில் காட்டம்!

Chithra / Mar 4th 2025, 1:20 pm
image


நாட்டில் உள்ள மக்களுக்கு சரியான முறையில் உண்மையை கூறுங்கள். உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

அவர் இன்று பாராளுமன்றில்  உரையாற்றுகையில் ,

வைத்தியர்களுடைய  சம்பளத்தில் சாதாரணமாக மேலதிக நேரத்தை கணக்கிடுவார்கள். அவர்களுடைய அடிப்படைச் சம்பளத்தை வைத்து தான் அது கணக்கிடப்படும். இப்பொழுது அவர்கள் 120 மணித்தியாலங்கள் வேலை   செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகரிக்கப்பட வேண்டிய சம்பளம் குறைவாக காணப்படுகிறது.

வைத்தியர்கள் போராட்டம் செய்கிறார்கள் என்றால் நாட்டில் உள்ள வைத்தியர்கள் அனைவரும் முட்டாள்களாக இருக்க வேண்டும். இவர் மாத்திரம்தான் கெட்டிக்காரராக இருக்க வேண்டும். உங்களுடைய பக்கம் 16 பேர் இருக்கிறார்கள்.

எங்களுடைய வைத்தியர்கள் இங்கிருந்து இங்கிலாந்துக்கு சென்று  பணியாற்றுகிறார்கள். அந்த நிலைமைக்கு தள்ளியிருப்பவர்கள் இவர்கள் தான். 

நாட்டில் உள்ள மக்களுக்கு சரியான முறையில் உண்மையை கூறுங்கள். உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குங்கள் என தெரிவித்தார்.

UK இற்கு ஓடிய வைத்தியர்கள் அர்ச்சுனா எம்பி சபையில் காட்டம் நாட்டில் உள்ள மக்களுக்கு சரியான முறையில் உண்மையை கூறுங்கள். உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.அவர் இன்று பாராளுமன்றில்  உரையாற்றுகையில் ,வைத்தியர்களுடைய  சம்பளத்தில் சாதாரணமாக மேலதிக நேரத்தை கணக்கிடுவார்கள். அவர்களுடைய அடிப்படைச் சம்பளத்தை வைத்து தான் அது கணக்கிடப்படும். இப்பொழுது அவர்கள் 120 மணித்தியாலங்கள் வேலை   செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகரிக்கப்பட வேண்டிய சம்பளம் குறைவாக காணப்படுகிறது.வைத்தியர்கள் போராட்டம் செய்கிறார்கள் என்றால் நாட்டில் உள்ள வைத்தியர்கள் அனைவரும் முட்டாள்களாக இருக்க வேண்டும். இவர் மாத்திரம்தான் கெட்டிக்காரராக இருக்க வேண்டும். உங்களுடைய பக்கம் 16 பேர் இருக்கிறார்கள்.எங்களுடைய வைத்தியர்கள் இங்கிருந்து இங்கிலாந்துக்கு சென்று  பணியாற்றுகிறார்கள். அந்த நிலைமைக்கு தள்ளியிருப்பவர்கள் இவர்கள் தான். நாட்டில் உள்ள மக்களுக்கு சரியான முறையில் உண்மையை கூறுங்கள். உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குங்கள் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement