தமிழ் இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரி நிற்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பார்த்து உள் நாட்டு நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கூறிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைத்து கதை அளந்துவிட்டு சென்றுள்ளார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்து இறுதிப் போரிலும் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்காண தமிழ் மக்கள் கொல்லப்பட காரணமானவர்கள் ராஜபக்சாக்களின் வேட்டிக்குள் மறைந்திருந்தவர்கள் இன்று போர்க்குற்றவாளிகளை விசாரிப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.
எய்தவனை நோவதா? இல்லை அம்பை நோவதா? என்றால் எய்தவன் தான் குற்றவாளி ஆகவே அநுரகுமார போன்றோர் எய்தவர்கள் என்றால் கள்ளனே கள்ளனை விசாரிப்பதா?
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கும் போர்க் குற்றங்களுக்குமான நியாயமான விசாரணையை மேற் கொள்வதற்கு உரிய சட்ட வரைபுகள் இலங்கை நீதித்துறையின் குற்றவியல் சட்டக் கோவையில் இல்லை. அத்துடன் குற்றம் இழைத்த தரப்பே விசாரிப்பது என்பது மிக மிக வேடிக்கையான விடையம் உலகில் அப்படி நடந்ததாக வரலாறு இல்லை.
எனவே, கடந்த கால ஆட்சியாளர்கள் போல அநுரகுமார வார்த்தைகளால் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற கற்பனையில் மனப்பால் குடிக்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களை இளிச்ச வாயர்கள் என நினைக்கிறாரா அநுர - சபா.குகதாஸ் சீற்றம். தமிழ் இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரி நிற்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பார்த்து உள் நாட்டு நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கூறிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைத்து கதை அளந்துவிட்டு சென்றுள்ளார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்து இறுதிப் போரிலும் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்காண தமிழ் மக்கள் கொல்லப்பட காரணமானவர்கள் ராஜபக்சாக்களின் வேட்டிக்குள் மறைந்திருந்தவர்கள் இன்று போர்க்குற்றவாளிகளை விசாரிப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.எய்தவனை நோவதா இல்லை அம்பை நோவதா என்றால் எய்தவன் தான் குற்றவாளி ஆகவே அநுரகுமார போன்றோர் எய்தவர்கள் என்றால் கள்ளனே கள்ளனை விசாரிப்பதாதமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கும் போர்க் குற்றங்களுக்குமான நியாயமான விசாரணையை மேற் கொள்வதற்கு உரிய சட்ட வரைபுகள் இலங்கை நீதித்துறையின் குற்றவியல் சட்டக் கோவையில் இல்லை. அத்துடன் குற்றம் இழைத்த தரப்பே விசாரிப்பது என்பது மிக மிக வேடிக்கையான விடையம் உலகில் அப்படி நடந்ததாக வரலாறு இல்லை.எனவே, கடந்த கால ஆட்சியாளர்கள் போல அநுரகுமார வார்த்தைகளால் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற கற்பனையில் மனப்பால் குடிக்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.