பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உண்ணும் மக்கள் விரைவாகவே இறக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பிஸ்கட்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், போன்ற அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை தற்போது உட்கொள்ளும் போக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
யூ.பி.எஃப். எனப்படும் இத்தகைய உணவுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவை வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படுவதில்லை. உணவின் தோற்றத்தை மேம்படுத்த நிறமூட்டிகள் போன்ற சேர்க்கைப் பொருட்கள், இனிப்பூட்டிகள் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆரோக்கியத்தை இந்த உணவுகள் மோசமாக்கும் என்று கூறுகிறார்கள். இத்தகைய உணவுப் பொருட்களில் கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை அதிக அளவில் இருப்பதால் இத்தகய நிலமை உருவாகின்றது
இத்தகைய உணவுகளை உட்கொள்வதால் மனிதர்கள் முன்கூட்டியே உயிரிழக்கின்றனர் என்பதை இந்த ஆய்வு உறுதியாக நிரூபிக்கவில்லை.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ஒருவர் நுகரும் மொத்த கலோரிகளில் பாதிக்கும் மேலானவை அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்தே கிடைக்கிறது.
அந்த நாடுகளில் முன்கூட்டியே நிகழும் மரணங்களில் 14% இத்தகைய உணவுகளை உட்கொள்வதோடு தொடர்புடையதாக உள்ளது என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
அந்த ஆய்வில் வரும் எண்ணிக்கைகள், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளால், மக்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கத்தை கணிக்கக்கூடிய கணினி மாதிரிகள் மூலம் உருவாக்கப்பட்டவை.
'இது போன்ற ஆராய்ச்சியால், எது எத்தகைய பிரச்னையை உருவாக்குகிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது,' என்றும் அவர் மேற்கோள்காட்டுகிறார்.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் உடற்பருமன் நிபுணராக பணியாற்றும் நெரிஸ் அஸ்ட்பரிஇ இந்த ஆராய்ச்சியில் உள்ள வரம்புகளை ஒப்புக்கொள்கிறார்.
அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரையைக் கொண்டுள்ள உணவுகள் வகை 2 நீரிழிவு நோய்இ உடல் பருமன்இ இருதய பிரச்னைகள் மற்றும் சில புற்றுநோய்களை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதன் மூலம் முன்கூட்டியே மரணம் ஏற்படலாம்.
'பல அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்பு, சர்க்கரை அதிகமாக உள்ளன,' என்று கூறுகிறார் நெரிஸ் அஸ்ட்பரி.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ஸ்டீஃபன் பர்கெஸ், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலுக்கு தீங்கானது என்பதை இத்தகைய ஆய்வுகள் மூலம் நிரூபிக்க இயலாது என்று கூறுகிறார்.
பல்வேறு நாடுகள் மற்றும் கலாசாரங்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள், இத்தகைய பதப்படுத்தப்பட்ட உணவுகளால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று கூறினால், நாம் நினைப்பதைக் காட்டிலும் பல விளைவுகளை இந்த உணவுகள் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளால் விரைவில் மரணமா - ஆய்வில் அதிர்ச்சித் தகவல் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உண்ணும் மக்கள் விரைவாகவே இறக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பிஸ்கட்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், போன்ற அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை தற்போது உட்கொள்ளும் போக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.யூ.பி.எஃப். எனப்படும் இத்தகைய உணவுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவை வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படுவதில்லை. உணவின் தோற்றத்தை மேம்படுத்த நிறமூட்டிகள் போன்ற சேர்க்கைப் பொருட்கள், இனிப்பூட்டிகள் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.ஆரோக்கியத்தை இந்த உணவுகள் மோசமாக்கும் என்று கூறுகிறார்கள். இத்தகைய உணவுப் பொருட்களில் கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை அதிக அளவில் இருப்பதால் இத்தகய நிலமை உருவாகின்றதுஇத்தகைய உணவுகளை உட்கொள்வதால் மனிதர்கள் முன்கூட்டியே உயிரிழக்கின்றனர் என்பதை இந்த ஆய்வு உறுதியாக நிரூபிக்கவில்லை.அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ஒருவர் நுகரும் மொத்த கலோரிகளில் பாதிக்கும் மேலானவை அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்தே கிடைக்கிறது.அந்த நாடுகளில் முன்கூட்டியே நிகழும் மரணங்களில் 14% இத்தகைய உணவுகளை உட்கொள்வதோடு தொடர்புடையதாக உள்ளது என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.அந்த ஆய்வில் வரும் எண்ணிக்கைகள், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளால், மக்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கத்தை கணிக்கக்கூடிய கணினி மாதிரிகள் மூலம் உருவாக்கப்பட்டவை.'இது போன்ற ஆராய்ச்சியால், எது எத்தகைய பிரச்னையை உருவாக்குகிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது,' என்றும் அவர் மேற்கோள்காட்டுகிறார்.ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் உடற்பருமன் நிபுணராக பணியாற்றும் நெரிஸ் அஸ்ட்பரிஇ இந்த ஆராய்ச்சியில் உள்ள வரம்புகளை ஒப்புக்கொள்கிறார்.அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரையைக் கொண்டுள்ள உணவுகள் வகை 2 நீரிழிவு நோய்இ உடல் பருமன்இ இருதய பிரச்னைகள் மற்றும் சில புற்றுநோய்களை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதன் மூலம் முன்கூட்டியே மரணம் ஏற்படலாம்.'பல அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்பு, சர்க்கரை அதிகமாக உள்ளன,' என்று கூறுகிறார் நெரிஸ் அஸ்ட்பரி.கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ஸ்டீஃபன் பர்கெஸ், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலுக்கு தீங்கானது என்பதை இத்தகைய ஆய்வுகள் மூலம் நிரூபிக்க இயலாது என்று கூறுகிறார்.பல்வேறு நாடுகள் மற்றும் கலாசாரங்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள், இத்தகைய பதப்படுத்தப்பட்ட உணவுகளால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று கூறினால், நாம் நினைப்பதைக் காட்டிலும் பல விளைவுகளை இந்த உணவுகள் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது