• Jul 12 2025

கிளிநொச்சியில் தவறிவிழுந்த குடும்பஸ்தர் -புகையிரதத்துடன் மோதி பலி!

Thansita / Jul 12th 2025, 9:48 am
image

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் புகையிரதம், கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில், தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த நாற்பது வயதுடைய கறுப்பையா ஐங்கரன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையில் வீழ்ந்த நிலையில் புகையிரதத்துடன் மோதியே உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

கிளிநொச்சி பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் தவறிவிழுந்த குடும்பஸ்தர் -புகையிரதத்துடன் மோதி பலி காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் புகையிரதம், கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.இந்த சம்பவத்தில், தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த நாற்பது வயதுடைய கறுப்பையா ஐங்கரன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மதுபோதையில் வீழ்ந்த நிலையில் புகையிரதத்துடன் மோதியே உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.கிளிநொச்சி பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement