• Sep 23 2024

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு இந்த வாரத்தில் நிறைவடையும் -அமைச்சர் ரஞ்சித்சியம்பலாபிட்டிய...!samugammedia

Anaath / Sep 15th 2023, 4:41 pm
image

Advertisement

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இந்த வாரத்தில் நிறைவடையவுள்ளதாக   நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று காலை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே  அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், உள்நாட்டு கடன் மேம்படுத்தல் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அபிவிருத்தி பத்திரங்கள், ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி,  ஓய்வூதிய நிதிகள், போன்றவை  மத்திய அரசிடம் உள்ள அரசாங்கத்தின் முற்பணங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் குறிப்பிட்டார். 

அபிவிருத்திப் பத்திரங்கள் ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடைந்துள்ளதாகவும், ஓய்வூதிய நிதியை மேம்படுத்தும் பணிகள் நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அதன்படி, தற்போதுள்ள பத்திரங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் முற்பணங்கள் மட்டுமே உகந்ததாக இருக்கும். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் குறித்த பணிகள் நிறைவடையும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு இந்த வாரத்தில் நிறைவடையும் -அமைச்சர் ரஞ்சித்சியம்பலாபிட்டிய.samugammedia உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இந்த வாரத்தில் நிறைவடையவுள்ளதாக   நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று காலை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே  அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர், உள்நாட்டு கடன் மேம்படுத்தல் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அபிவிருத்தி பத்திரங்கள், ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி,  ஓய்வூதிய நிதிகள், போன்றவை  மத்திய அரசிடம் உள்ள அரசாங்கத்தின் முற்பணங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் குறிப்பிட்டார். அபிவிருத்திப் பத்திரங்கள் ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடைந்துள்ளதாகவும், ஓய்வூதிய நிதியை மேம்படுத்தும் பணிகள் நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.அதன்படி, தற்போதுள்ள பத்திரங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் முற்பணங்கள் மட்டுமே உகந்ததாக இருக்கும். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் குறித்த பணிகள் நிறைவடையும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement