• Nov 14 2024

ஈரான் அச்சுறுத்தல் காரணமாக டொனால்ட் ட்ரம்பின் ரகசிய சேவை பாதுகாப்பு அதிகரிக்கப்பு

Tharun / Jul 17th 2024, 4:42 pm
image

உளவுத்துறையின் உளவுத் தகவல்கள் காரணமாக  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியை படுகொலை செய்ய ஈரானிய அச்சுறுத்தல் இருப்பதால்  ட்ரம்பின்  இரகசிய சேவை அவரது  பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

சனிக்கிழமையன்று முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான படுகொலை முயற்சியுடன் ஈரானிய  தொடர்புடைய சதித்திட்டம் தொடர்பான எந்த அறிகுறியும் இல்லை .

ஜனவரி 2020 இல் ஈரானிய இராணுவ அதிகாரி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து ஈரான் இந்த வகையான அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாக ஆதாரங்கள்   தெரிவிக்கின்றன.

"இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் பக்கச்சார்பானவை". "ஈரான் இஸ்லாமிய குடியரசின் கண்ணோட்டத்தில், ட்ரம்ப் ஒரு குற்றவாளி, அவர் ஜெனரல் சுலைமானியை படுகொலை செய்ய உத்தரவிட்டதற்காக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்." என  ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகிய இருவருக்குமே பாதுகாப்பு அளித்து அமெரிக்கா இந்த அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்து வருகிறது.

சுலைமானியைக் கொன்ற இராணுவத் தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் மற்றும் அவரது மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக ஈரானில் இருந்து எழுந்த அச்சுறுத்தல்கள் ஒருபோதும் குறையவில்லை, ஆனால் சமீபத்திய மாதங்களில் சேகரிக்கப்பட்ட உளவுத்துறை, ட்ரம்பிற்கு எதிரான சதித்திட்டத்தை செயல்படுத்துவதில் ஈரானிய ஆட்சி அதிக கவனம் செலுத்தியிருக்கலாம் என்று நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

ஈரான் அச்சுறுத்தல் காரணமாக டொனால்ட் ட்ரம்பின் ரகசிய சேவை பாதுகாப்பு அதிகரிக்கப்பு உளவுத்துறையின் உளவுத் தகவல்கள் காரணமாக  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியை படுகொலை செய்ய ஈரானிய அச்சுறுத்தல் இருப்பதால்  ட்ரம்பின்  இரகசிய சேவை அவரது  பாதுகாப்பை அதிகரித்துள்ளது.சனிக்கிழமையன்று முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான படுகொலை முயற்சியுடன் ஈரானிய  தொடர்புடைய சதித்திட்டம் தொடர்பான எந்த அறிகுறியும் இல்லை .ஜனவரி 2020 இல் ஈரானிய இராணுவ அதிகாரி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து ஈரான் இந்த வகையான அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாக ஆதாரங்கள்   தெரிவிக்கின்றன."இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் பக்கச்சார்பானவை". "ஈரான் இஸ்லாமிய குடியரசின் கண்ணோட்டத்தில், ட்ரம்ப் ஒரு குற்றவாளி, அவர் ஜெனரல் சுலைமானியை படுகொலை செய்ய உத்தரவிட்டதற்காக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்." என  ஈரான் அறிவித்துள்ளது.அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகிய இருவருக்குமே பாதுகாப்பு அளித்து அமெரிக்கா இந்த அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்து வருகிறது.சுலைமானியைக் கொன்ற இராணுவத் தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் மற்றும் அவரது மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக ஈரானில் இருந்து எழுந்த அச்சுறுத்தல்கள் ஒருபோதும் குறையவில்லை, ஆனால் சமீபத்திய மாதங்களில் சேகரிக்கப்பட்ட உளவுத்துறை, ட்ரம்பிற்கு எதிரான சதித்திட்டத்தை செயல்படுத்துவதில் ஈரானிய ஆட்சி அதிக கவனம் செலுத்தியிருக்கலாம் என்று நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement