• May 04 2024

அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம்..! இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

Chithra / Mar 19th 2024, 7:23 am
image

Advertisement


 இலங்கையின் கடற்றொழிலாளர்களை நடப்பு நாட்களில் தொழிலுக்காக அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என  கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இலங்கையில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (16) அரபிக்கடலில் ஈரானிய கடற்றொழில் படகை ஆயுதமேந்திய சோமாலிய குழு கடத்திய சம்பவம் தொடர்பான செய்திகளின் பின்னரே இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்த நிலையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் நேற்றையதினம் (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளர் சுசந்த கஹவத்த, ஈரானிய கப்பலுடன் தொடர்புடைய கடற்பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர் குழுவொன்று தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே இலங்கையின் கடற்றொழிலாளர்கள் குறித்த பிரதேசத்தை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று சுசந்த கஹவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம். இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை  இலங்கையின் கடற்றொழிலாளர்களை நடப்பு நாட்களில் தொழிலுக்காக அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என  கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இலங்கையில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த சனிக்கிழமை (16) அரபிக்கடலில் ஈரானிய கடற்றொழில் படகை ஆயுதமேந்திய சோமாலிய குழு கடத்திய சம்பவம் தொடர்பான செய்திகளின் பின்னரே இந்த அறிவிப்பு வந்துள்ளது.இந்த நிலையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் நேற்றையதினம் (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளர் சுசந்த கஹவத்த, ஈரானிய கப்பலுடன் தொடர்புடைய கடற்பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர் குழுவொன்று தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.எனவே இலங்கையின் கடற்றொழிலாளர்கள் குறித்த பிரதேசத்தை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று சுசந்த கஹவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement