ஜனாதிபதி தேர்தலில் உங்களுக்கு எது சரியாக தோன்றுகிறதோ அவருக்கே வாக்களியுங்கள் என ஜனாதிபதி வேட்பாளர் மயில் வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றைய தினம் (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்கள் மக்கள் மடையர்கள் அல்ல. தெளிவானவர்கள். அவர்களிடம் நான் வைக்கும் கோரிக்கை 38 பேர் இருக்கிறது. அவர்களின் சின்னம் இருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னது போல 1 ஐயும் 2 ஐயும் அறிவிலிருந்து தீர்மானியுங்கள்.
எல்லோரும் . எல்லோரும் கொள்கை அறிக்கை வெளியிடுகிறார்கள். இது உங்களுக்கு எது சரி என்பதை நீங்கள் தீர்மானித்து 1, 2 இலக்கத்தை அந்த தலைவர்களுக்கு கொடுங்கள்.
நான் இலங்கையில் ஜனாதிபதியாக முடியாது என்ற ரீதியில் தான் போட்டி போடுகிறேன். எனவே இந்த 1,2 தெரிவில் எனக்கு வழங்கப்பட்டால் அது சிதறடிக்கப்பட்ட வாக்கு. நான் சிதறடிக்க வரவில்லை, சிறகடிக்க வந்துள்ளேன். அரசியல் வானில் பறக்க வந்திருக்கிறேன். எங்களுக்கு உங்கள் அன்பை மட்டும் காட்டுங்கள். நான் 1கோடி 75000 வாக்குக்களை எப்படி வாங்குவேன் என்பதை தர்கா ரீதியாக நிறுவுவேன். அப்படி வாங்கினாலும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாததன் காரணம் நான் சிங்கள பௌத்தன் இல்லை.
எனக்கு தகுதி இல்லாமல் இல்லை . நான் தகுதியானவன். என்னுடைய தகுதி 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு போகிறேன் நன்றாக வேலை செய்த பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 பேரை தெரிவு செய்கிற போது எனக்கு கிடைத்தது 6 ஆம் இடம், 2018 ஆம் ஆண்டு பாராளுமன்றில் 5 பேரில் 3 ஆம் இடம். 2019 ஆம் ஆண்டு 2 ஆம் இடம், நான் எந்த விதத்திலும் தகுதி குறைந்தவன் இல்லை. என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் முதலாம் இரண்டாம் வாக்குகளை எனக்கு செலுத்த வேண்டாம் - ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜ் ஆலோசனை ஜனாதிபதி தேர்தலில் உங்களுக்கு எது சரியாக தோன்றுகிறதோ அவருக்கே வாக்களியுங்கள் என ஜனாதிபதி வேட்பாளர் மயில் வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார். யாழில் நேற்றைய தினம் (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,எங்கள் மக்கள் மடையர்கள் அல்ல. தெளிவானவர்கள். அவர்களிடம் நான் வைக்கும் கோரிக்கை 38 பேர் இருக்கிறது. அவர்களின் சின்னம் இருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னது போல 1 ஐயும் 2 ஐயும் அறிவிலிருந்து தீர்மானியுங்கள். எல்லோரும் . எல்லோரும் கொள்கை அறிக்கை வெளியிடுகிறார்கள். இது உங்களுக்கு எது சரி என்பதை நீங்கள் தீர்மானித்து 1, 2 இலக்கத்தை அந்த தலைவர்களுக்கு கொடுங்கள். நான் இலங்கையில் ஜனாதிபதியாக முடியாது என்ற ரீதியில் தான் போட்டி போடுகிறேன். எனவே இந்த 1,2 தெரிவில் எனக்கு வழங்கப்பட்டால் அது சிதறடிக்கப்பட்ட வாக்கு. நான் சிதறடிக்க வரவில்லை, சிறகடிக்க வந்துள்ளேன். அரசியல் வானில் பறக்க வந்திருக்கிறேன். எங்களுக்கு உங்கள் அன்பை மட்டும் காட்டுங்கள். நான் 1கோடி 75000 வாக்குக்களை எப்படி வாங்குவேன் என்பதை தர்கா ரீதியாக நிறுவுவேன். அப்படி வாங்கினாலும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாததன் காரணம் நான் சிங்கள பௌத்தன் இல்லை.எனக்கு தகுதி இல்லாமல் இல்லை . நான் தகுதியானவன். என்னுடைய தகுதி 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு போகிறேன் நன்றாக வேலை செய்த பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 பேரை தெரிவு செய்கிற போது எனக்கு கிடைத்தது 6 ஆம் இடம், 2018 ஆம் ஆண்டு பாராளுமன்றில் 5 பேரில் 3 ஆம் இடம். 2019 ஆம் ஆண்டு 2 ஆம் இடம், நான் எந்த விதத்திலும் தகுதி குறைந்தவன் இல்லை. என அவர் தெரிவித்துள்ளார்.