• May 17 2024

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை அரசியலாக்கவேண்டாம்...! அன்னராசா வேண்டுகோள்...!samugammedia

Sharmi / Oct 14th 2023, 3:28 pm
image

Advertisement

எமது பிரச்சனைகளை அரசியலாக்காது , பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழக கடற்தொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி கொடுப்பது தொடர்பாக அராசங்கம் பரிசீலிப்பதாக இலங்கை பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை கடற்தொழில் அமைச்சர், தமிழக கடற்தொழிலாளர்களின் படகை ஒரு நொடி கூட அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு கடற்தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் எமக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கடற்தொழிலாளர்கள் பிரச்சனையை இரு நாட்டு அரசாங்கமும் பேசி தீர்த்து வைக்க வேண்டும். அதனை விடுத்து அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு விடயத்தை சொன்னால் நாம் எதனை நம்புவது?

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும். பிரதமரின் கருத்தா? கடற்தொழில் அமைச்சின் கருத்தா இறுதியானதும், தீர்க்கமானதுமானது என்பதை எமக்கு அறிய தர வேண்டும் என தெரிவித்தார்.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை அரசியலாக்கவேண்டாம். அன்னராசா வேண்டுகோள்.samugammedia எமது பிரச்சனைகளை அரசியலாக்காது , பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழக கடற்தொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி கொடுப்பது தொடர்பாக அராசங்கம் பரிசீலிப்பதாக இலங்கை பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இலங்கை கடற்தொழில் அமைச்சர், தமிழக கடற்தொழிலாளர்களின் படகை ஒரு நொடி கூட அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.இரு நாட்டு கடற்தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் எமக்கு தெரியப்படுத்த வேண்டும்.கடற்தொழிலாளர்கள் பிரச்சனையை இரு நாட்டு அரசாங்கமும் பேசி தீர்த்து வைக்க வேண்டும். அதனை விடுத்து அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு விடயத்தை சொன்னால் நாம் எதனை நம்புவது இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும். பிரதமரின் கருத்தா கடற்தொழில் அமைச்சின் கருத்தா இறுதியானதும், தீர்க்கமானதுமானது என்பதை எமக்கு அறிய தர வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement