• Nov 25 2024

முன்னாள் போராளிகளின் தியாகத்தை அற்ப சலுகைகளுக்காக விலை பேசாதீர்- சபா.குகதாஸ் வலியுறுத்து..!

Sharmi / Aug 26th 2024, 3:54 pm
image

விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் தியாகத்தை ஒட்டுமொத்தமாக விலை பேசுவதை விலை பேசும் தரப்புகள் கைவிடவேண்டும் என  முன்னாள் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்றையதினம்(26) வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு என்பது ஸ்ரீலங்கா அரசாங்கத்தாலோ அல்லது அதன் படைகளினாலோ கொடுக்கப்பட்டது அல்ல.

யுத்த முடிவின் இறுதி நாட்களில் சரணடைகின்ற போது சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களினதும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினதும் உடனடி தலையீடு காரணமாக அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் பதிவுகளை மேற்கொண்டதன் அடிப்படையிலும் அவ்வாறான பதிவுகளை உட்படுத்தப்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்பது தான் உண்மை. 

அதனை விட முள்ளிவாய்க்காலில் வட்டுவாகல் பகுதியில் சரணடைந்து ஓமந்தை பகுதியில் சரணடைந்து பதியப்படாமல் உடனடியாக மீளவும் முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போராளிகள் அவர்கள் சார்ந்த உறவினர்கள் இன்று வரை காணாமல் ஆக்கப்பட்டு ஒரு பட்டியலிலும் படுகொலை செய்யப்பட்டோர் ஒரு பட்டியலிலும் இருப்பதை உலகம் அறியும்.

அதன் அடிப்படையில் ஒப்பற்ற தங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்த அத்தனை தரப்புகளினதும் பெறுமதியை அளவிட முடியாது.

அந்த தியாகத்தை  ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் காலங்களில் கொடுக்கின்ற எந்தவிதமான வாக்குறுதிகளையும் இதுவரை செயல்படுத்தாத சிங்கள பேரினவாத வேட்பாளர்களுக்கு அதிலும் குறிப்பாக மிக மோசமாக விடுதலைப் போராட்டத்தை சிதைத்த வேட்பாளருக்கு  வாக்களிக்குமாறு  புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் என்ற பெயரில் ஊடக அறிக்கைகள் வெளி வருவதை பெருந்தொகையான முன்னாள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் மனவேதனையுடன் கடந்த செல்வதை எல்லோரும் அறிவர்.

இதனால் இவ்வாறு விடுதலைப் போராட்டத்தின் தியாகத்தையும் அதன் வலிகளையும் வேதனைகளையும் அவலங்களையும் அற்ப சலுகைகளுக்காக விலை பேசுகின்ற தரப்புகளை மக்கள் இனம் கண்டு கொள்வது காலத்தின் கட்டாயம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளின் தியாகத்தை அற்ப சலுகைகளுக்காக விலை பேசாதீர்- சபா.குகதாஸ் வலியுறுத்து. விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் தியாகத்தை ஒட்டுமொத்தமாக விலை பேசுவதை விலை பேசும் தரப்புகள் கைவிடவேண்டும் என  முன்னாள் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் இன்றையதினம்(26) வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு என்பது ஸ்ரீலங்கா அரசாங்கத்தாலோ அல்லது அதன் படைகளினாலோ கொடுக்கப்பட்டது அல்ல.யுத்த முடிவின் இறுதி நாட்களில் சரணடைகின்ற போது சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களினதும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினதும் உடனடி தலையீடு காரணமாக அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் பதிவுகளை மேற்கொண்டதன் அடிப்படையிலும் அவ்வாறான பதிவுகளை உட்படுத்தப்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்பது தான் உண்மை. அதனை விட முள்ளிவாய்க்காலில் வட்டுவாகல் பகுதியில் சரணடைந்து ஓமந்தை பகுதியில் சரணடைந்து பதியப்படாமல் உடனடியாக மீளவும் முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போராளிகள் அவர்கள் சார்ந்த உறவினர்கள் இன்று வரை காணாமல் ஆக்கப்பட்டு ஒரு பட்டியலிலும் படுகொலை செய்யப்பட்டோர் ஒரு பட்டியலிலும் இருப்பதை உலகம் அறியும்.அதன் அடிப்படையில் ஒப்பற்ற தங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்த அத்தனை தரப்புகளினதும் பெறுமதியை அளவிட முடியாது.அந்த தியாகத்தை  ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் காலங்களில் கொடுக்கின்ற எந்தவிதமான வாக்குறுதிகளையும் இதுவரை செயல்படுத்தாத சிங்கள பேரினவாத வேட்பாளர்களுக்கு அதிலும் குறிப்பாக மிக மோசமாக விடுதலைப் போராட்டத்தை சிதைத்த வேட்பாளருக்கு  வாக்களிக்குமாறு  புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் என்ற பெயரில் ஊடக அறிக்கைகள் வெளி வருவதை பெருந்தொகையான முன்னாள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் மனவேதனையுடன் கடந்த செல்வதை எல்லோரும் அறிவர்.இதனால் இவ்வாறு விடுதலைப் போராட்டத்தின் தியாகத்தையும் அதன் வலிகளையும் வேதனைகளையும் அவலங்களையும் அற்ப சலுகைகளுக்காக விலை பேசுகின்ற தரப்புகளை மக்கள் இனம் கண்டு கொள்வது காலத்தின் கட்டாயம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement