• Feb 20 2025

மீண்டும் குரங்கை ஞாபகப்படுத்த வேண்டாம் - சபையில் கொந்தளித்த அமைச்சர்

Chithra / Feb 18th 2025, 11:15 am
image

மின்துண்டிப்பு தொடர்பில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பதிலளிக்கப்படும். மீண்டும் மீண்டும் குரங்கை ஞாபகப்படுத்த வேண்டாம் என அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு ரவிகருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மின்துண்டிப்பு தொடர்பில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பதிலளிக்கப்படும். அது குறித்து எரிசக்தி அமைச்சர் பதிலளிப்பார் என்றும் தெரிவித்தார்.

குரங்கு கதையை உலகே நம்புவதாகவும் நாம் இது குறித்து உண்மைத்தன்மையை கேட்பதில் என்ன பிரச்சினை என தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.  

அதற்கு,  இப்போது குரங்கு கதை முடிந்து விட்டது, மீண்டும் மீண்டும் குரங்கை ஞாபகப்படுத்த வேண்டாம். தற்போது தடையின்றினை மின்சாரம் வழங்கப்படுகிறது தானே எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மீண்டும் குரங்கை ஞாபகப்படுத்த வேண்டாம் - சபையில் கொந்தளித்த அமைச்சர் மின்துண்டிப்பு தொடர்பில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பதிலளிக்கப்படும். மீண்டும் மீண்டும் குரங்கை ஞாபகப்படுத்த வேண்டாம் என அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு ரவிகருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மின்துண்டிப்பு தொடர்பில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பதிலளிக்கப்படும். அது குறித்து எரிசக்தி அமைச்சர் பதிலளிப்பார் என்றும் தெரிவித்தார்.குரங்கு கதையை உலகே நம்புவதாகவும் நாம் இது குறித்து உண்மைத்தன்மையை கேட்பதில் என்ன பிரச்சினை என தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.  அதற்கு,  இப்போது குரங்கு கதை முடிந்து விட்டது, மீண்டும் மீண்டும் குரங்கை ஞாபகப்படுத்த வேண்டாம். தற்போது தடையின்றினை மின்சாரம் வழங்கப்படுகிறது தானே எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement