• Sep 20 2024

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம்! கிளிநொச்சி மக்கள் போராட்டம்! samugammedia

Chithra / Sep 1st 2023, 1:52 pm
image

Advertisement

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் சிலர் இன்றைய தினம் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள 55 ஆவது படைப்பிரிவின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தமது பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக்கூறி கவனயிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்கள் தெரிவிக்கையில், 

தமது பகுதியில் அனைத்து விடயங்களிலும் இராணுவம் ஒத்தாசை புரிவதாகவும் தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான நிலைமையிலும் தங்களுக்கான குடிநீர் விநியோகத்தினையும் இராணுவத்தினரே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தமது பகுதிகளில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வாயினும் இராணுவத்தினரின் உதவியே முதல் கிடைக்கப் பெறுவதாகவும், மணரநிகழ்வுகளில் கூட இராணுவத்தின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. 

அத்துடன் தமது பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினரே முன்னிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே அப்பகுதியில் உள்ள இராணுவ முகாமினை அகற்ற வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.


இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் கிளிநொச்சி மக்கள் போராட்டம் samugammedia இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் சிலர் இன்றைய தினம் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள 55 ஆவது படைப்பிரிவின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தமது பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக்கூறி கவனயிர்ப்பில் ஈடுபட்டனர்.இதன்போது அவர்கள் தெரிவிக்கையில், தமது பகுதியில் அனைத்து விடயங்களிலும் இராணுவம் ஒத்தாசை புரிவதாகவும் தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான நிலைமையிலும் தங்களுக்கான குடிநீர் விநியோகத்தினையும் இராணுவத்தினரே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.தமது பகுதிகளில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வாயினும் இராணுவத்தினரின் உதவியே முதல் கிடைக்கப் பெறுவதாகவும், மணரநிகழ்வுகளில் கூட இராணுவத்தின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. அத்துடன் தமது பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினரே முன்னிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே அப்பகுதியில் உள்ள இராணுவ முகாமினை அகற்ற வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement